search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பால் விலையை குறைக்கும் வரை பா.ஜ.க. தொடர்ந்து போராடும்
    X

    கடலாடியில் பா.ஜ.க. சார்பில் பால் விலை உயர்வை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் இ.எம்.டி. கதிரவன் பேசினார். அருகில் பா.ஜ.க. பிரமுகர்-உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சண்முகநாதன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

    பால் விலையை குறைக்கும் வரை பா.ஜ.க. தொடர்ந்து போராடும்

    • பால் விலையை குறைக்கும் வரை பா.ஜ.க. தொடர்ந்து போராடும் என உச்சிப்புளியில் நடந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் பேசினார்.
    • பால் விலையை குறைக்கும் வரை பா.ஜ.க. தொடர்ந்து போராடும் என உச்சிப்புளியில் நடந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் பேசினார்.

    பனைக்குளம்

    தமிழகத்தில் பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்சியின் தலைவர் இ.எம்.டி. கதிரவன் உத்தரவின்படி, பா.ஜ.க.வினர் மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி முழக்கமிட்டனர்.

    மண்டபம் ஒன்றியம் உச்சிப்புளி பஸ் நிறுத்தம் அருகில் பிரமாண்ட அளவில் ஆர்ப்பாட்ட ஏற்பாடுகளை ஒன்றிய தலைவர் விக்ராந்த் சந்துரு செய்திருந்தார்.

    இந்த போராட்டம் பா.ஜ.க. மாவட்ட தலைவர் இ.எம்.டி.கதிரவன் தலைமையில் நடந்தது. இதில் பா.ஜ.க. முக்கிய பிரமுகரும், உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான சண்முகநாதன், மாவட்ட பொதுச் செயலாளர் ஆத்மா கார்த்திக், மாவட்டத் துணைத் தலைவர் அழகர், ஓ.பி.சி. பிரசார பிரிவு மாவட்ட தலைவர் தவமணி, தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் பரமேசுவரன், தரவு தளம் மாவட்ட துணைத் தலைவர் பாலமுருகன், ஒன்றிய பொதுச் செயலாளர் கோபால், ஒன்றிய பொருளாளர் ஜோதி, பா.ஜ.க.வை சேர்ந்த முருகானந்தம், கோபி, தீபக், பூவேந்திரன், கண்ணன், கார்த்தி, பிரித்திவிராஜ் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

    முன்னதாக பா.ஜ.க. மாவட்ட தலைவர் இ.எம்.டி. கதிரவன் பேசுகையில், தமிழகத்தில் பா.ஜ.க. மாநில தலைவராக பொறுப்பேற்றது முதல் அண்ணாமலை தமிழக மக்களின் நலனில் முழு கவனம் எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார்.

    பொதுமக்களுக்காக பல்வேறு ஆர்ப்பாட்டங்க ளை நடத்தி மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வருகிறார். பிரதமர் மோடி இந்திய திருநாட்டில் நல்லாட்சியை நடத்தி மக்களையும், நாட்டையும் பாதுகாத்து வருகிறார். பிரதமர் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்.

    தமிழகத்தில் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே வருகிறது. இதை கண்டிக்கும் வகையில் மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவின்படி, மாநில அரசைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    பால் விலை, மின் கட்டணம், சொத்து வரி என அனைத்தும் உயர்த்தப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதை குறைக்கும் வரை பா.ஜ.க. தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி போராடுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார். இதுபோல் மாவட்டத்தில் பல்வேறு ஒன்றியங்களில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமான பா.ஜ.க.வினர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

    Next Story
    ×