search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளைஞர்களின் சாதனை நாட்டின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக அமையும்
    X

    இளையோர் விழாவை கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    இளைஞர்களின் சாதனை நாட்டின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக அமையும்

    • இளைஞர்களின் சாதனை நாட்டின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக அமையும் என ராமநாதபுரம் கூடுதல் கலெக்டர் பேசினார்.
    • போட்டித் தேர்வு, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, கலை நிகழ்ச்சி என பல்வேறு போட்டிகள் நடந்தன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகிர் தொழில்நுட்ப கல்லூரியில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மூலம் மாவட்ட நேரு யுவ கேந்திரா, செய்யது அம்மாள் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து இளையோர் திருவிழாவை நடத்தியது.

    கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன் குமார் தலைமை தாங்கி இளையோர்களுக்கான பல்வேறு போட்டிகளை ெதாடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:-

    கல்லூரியில் படிக்கும் போது சந்தோஷமாக இருக்கும். அதுதான் நம்முடைய வாழ்க்கையிலும் இருக்கும் என்று நினைத்து விடக்கூடாது. படித்து முடித்து வெளியே வந்து ஒரு இலக்கை பெறுவதற்கு நாம் படும் சிரமத்தை அளவிட முடியாது. அதனால் தான் படிக்கும்போேத ஒவ்வொருவரும் எதிர்காலத்தில் லட்சியம் என்ன? என்று திட்டமிட்டு செயல்பட்டு படித்தால் அந்த வெற்றி எளிதாக கிடைத்துவிடும்.

    இதே போல் படிக்கும் காலத்திலேயே திட்டமிட்டு செயல்பட வேண்டும். இளைஞர்களாகிய நீங்கள் நினைத்தால் முடியாதது ஒன்றுமில்லை. வெற்றி என்னும் இலக்கு உங்கள் அருகாமையில் உள்ளது.

    படிக்கும் காலத்தில் எதிர்காலத்தின் திட்டத்தை நினைத்து அதற்கேற்ப படித்து சாதனை படைக்க வேண்டும். உங்களுடைய ஒவ்வொருவரின் சாதனை தான் நாட்டின் வளர்ச்சிக்கும் வழிகாட்டியாக அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இளைஞர்களுக்கான போட்டித் தேர்வு, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, கலை நிகழ்ச்சி என பல்வேறு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்று, நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதில் நேரு யுவகேந்திர ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார், முகமது சதக் தஸ்தகீர் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் சோமசுந்தரம், செய்யது அம்மாள் கல்லூரி வள்ளி விநாயகம், பரமேசுவரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×