search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர்.எஸ்.மங்கலத்தில் 10.6 செ.மீ. மழை பதிவு
    X

    மழை காரணமாக கீழக்கரையில் தாழ்வான பகுதிகளில் தேங்கியிருந்த தண்ணீரை அகற்றும் பணி நகராட்சி கமிஷனர் செல்வராஜ் மேற்பார்ைவயில் ஊழியர்கள் மேற்கொண்டனர்.

    ஆர்.எஸ்.மங்கலத்தில் 10.6 செ.மீ. மழை பதிவு

    • ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் 10.6 சென்டிமீட்டர் மழை பதிவானது.
    • இங்கு நெல் விவசாயம் என்பது மற்ற மாவட்டங்களை விட குறைவு தான்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்த வரை வானம் பார்த்த பூமி என்று தான் சொல்ல வேண்டும். இங்கு நெல் விவசாயம் என்பது மற்ற மாவட்டங்களை விட குறைவு தான். இதனால் ஆண்டு தோறும் வடகிழக்கு பருவமழை சீசனை எதிர்பார்த்து தான் நெல் விவசாயமே நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசன் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. சீசன் தொடங்குவதற்கு முன்பே ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வந்தது. வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கி 5 நாட்களுக்கு மேலாகியும் இதுவரையிலும் ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால் விவசாயிகள் வருணபகவான் கருணை கிடைக்குமா என்ற ஏக்கத்தில் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆர்.எஸ்.மங்கலத்தில் 10.6 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

    ராமநாதபுரம் மாவட்ட த்தில் நேற்று இரவு முதல் இன்று காலை 6 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    கடலாடி- 14.60, வாலிநோக்கம்-29.40 கமுதி- 76.20 பள்ளமோர்க்குளம் - 22 முதுகுளத்தூர்-25 பரமக்குடி -57.80 ஆர்.எஸ்.மங்கலம்-106.80 மண்டபம் -27.70 ராமநாதபுரம்-25.20 பாம்பன்-32.40 ராமேசுவரம்-40.20 தங்கச்சிமடம்-25.40 தீர்த்தாண்டத்தனம் -35 திருவாடானை -29.80 தொண்டி-53.70 வட்டாணம் -38 மாவட்டம் முழுவதும் 639.20 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    விவசாயிகள் மகிழ்ச்சி

    தொண்டி பகுதியில் நேற்று இரவு முழுவதும் மழை கொட்டியது. நள்ளிரவு 11 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை இடைவிடாமல் தொடர்ந்து பெய்தபடி இருந்தது.

    இன்று காலை வரை தொண்டியில் 53.7 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. திருவாடானை பகுதியிலும் நீண்ட நேரம் மழை பெய்தது. இந்த மழை தற்போதைய விவசாயத்திற்கு ஏற்றதாக உள்ளதால் திருவாடானை பகுதியில் 26 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர் விவசாயம் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    Next Story
    ×