search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் மழையால் தெருக்களில் தேங்கி நிற்கும் மழைநீர்
    X

    வடக்கு பூதலூர் சந்து தெருவில் தேங்கி நிற்கும் மழைநீர்.

    தொடர் மழையால் தெருக்களில் தேங்கி நிற்கும் மழைநீர்

    • கொசு மருந்து அடிக்க வேண்டும் என்றும் கிராமமக்கள் எதிர்பார்ப்பு.
    • இளம் சம்பா பயிர்கள் மழையால் பாதிக்கப்பட கூடும்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் சுற்று வட்டார பகுதிகளில் இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இன்று காலையில் இருந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    கிராமப் பகுதிகளில் தாழ்வான தெருக்களில் தண்ணீர் சூழ்ந்தது.

    பல இடங்களில் சாலை சேறும் சகதியுமாக மாறியது.

    பூதலூர் ரெயில்வே கீழ்பாலத்திலும், ஜோதி நகர், ஜான்சி நகர், பாத்திமா நகர், இந்திரா நகரில் உள்ள தெருக்களிலும் மழை நீர் தேங்கியது.

    பூதலூர் மணியார் தோட்டம் 4-வது தெருவில் மழை நீர் தேங்கி நிற்பதையும், அங்கு மின்கம்பம் சேதமான நிலையில் உள்ளதையும் பூதலூர் தாசில்தார் பெர்ஷியா, வருவாய் ஆய்வாளர் முருகானந்தம் பார்வையிட்டு மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.

    கிராமப் பகுதியில் உள்ள தெருக்களில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி இருப்பதால் கொசு தொல்லை அதிகமாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு விடுகிறது.

    இதனால் உடனடியாக கொசு மருந்து அடிக்க வேண்டும் என்றும் கிராமமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக திருக்–காட்டுப்பள்ளி மற்றும் பூதலூர் பகுதியில் மேற்–ெகாள்ளப்பட்டு வரும் சம்பா நடவு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    அதேபோல இளம் சம்பா பயிர்கள் மழையால் பாதிக்கப்பட கூடும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    தற்போது பெய்து வரும் மழை காரணமாக குறிப்பிட்ட கடைசி தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஏற்ற வகையில் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் உரியவாறு ஆணைகளை பிறப்பித்து சிட்டா, அடங்கல்நகல் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

    Next Story
    ×