என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீடுகளை சூழ்ந்த தண்ணீரை படத்தில் காணலாம்.
திட்டக்குடி அருகே குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த மழை நீர்
- அப்பகுதி யில் உள்ள குடியிருப்பு பகுதியில் மழை நீர் சூழ்ந்து கொள்வது வாடிக்கையாக உள்ளது.
- ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கூடலூர் கிராமத்தில் உள்ள புதிய காலனியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மழைக்காலத்தில் அப்பகுதி யில் உள்ள குடியிருப்பு பகுதியில் மழை நீர் சூழ்ந்து கொள்வது வாடிக்கையாக உள்ளது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவ டிக்கைகள் இல்லை. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியா மல் உள்ளோம். கடந்த 2 தினங்களாக பெய்த கன மழை காரணமாக அருகில் பல்வேறு பகுதிகளில் இருந்து கூடலூர் காலனி வழியாக சாலையோரம் செல்லும் வாய்க்கால்களை சிலர் ஆக்கிரமித்துள்ளது.
மழைநீர் செல்ல முடியா மல் தேங்கி குடியிருப்பு பகுதியில் தண்ணீர் சூழ்ந்து கொள்வதாக கூறி அப்பகுதி மக்கள் ஒன்றுக்கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் தற்காலிகமாக கிராம பஞ்சாயத்து துப்புரவு பணியாளர்கள் கொண்டு வாய்க்கல்களில் உள்ள அடைப்புகளை சரி செய்து தண்ணீர் வெளியே செல்ல ஏற்பாடு செய்தார். தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பொதுமக்கள் உடனடியாக வடிகால் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






