என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருவெண்ணைநல்லூர் பகுதியில் மழை இடி தாக்கியதில் பெருமாள் கோவில் சிலைகள் சேதம்
  X

  இடி தாக்கி சேதமான கோவில் கோபுரத்தை படத்தில் காணலாம்.

  திருவெண்ணைநல்லூர் பகுதியில் மழை இடி தாக்கியதில் பெருமாள் கோவில் சிலைகள் சேதம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவெண்ணைநல்லூர் பகுதியில் மழை இடி தாக்கியதில் பெருமாள் கோவில் சிலைகள் சேதமடைந்துள்ளது.

  விழுப்புரம்:

  விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் நேற்று இரவு இடியுடன் பலத்த மழை பெய்தது. அப்போது புகழ்பெற்ற பழமைவாய்ந்த அகோபில மடம் ஆதீன பரம்பரை மிராசை சேர்ந்த ஜனகவல்லி தாயார் சமேத ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் கோவிலில் இடி விழுந்தது.

  இதில் கோவிலின் முன்புறம் உள்ள ராஜ கோபுரத்தின் சிலைகள் சேதம் அடைந்தன. அதோடு கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இடி தாக்கியதில் கோபுரத்தில் தங்கி இருந்த குரங்குகள் காயம் அடைந்தது.இந்த சம்பவத்தால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.கடந்த மே மாதம் இந்த கும்பாபிஷேகம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது .கோபுரத்தில் தங்கியிருந்த குரங்கும் அடிப்பட்டு உயிருக்கு போராடி வருகிறது.

  Next Story
  ×