search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆனைமலை அருகே ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த மாடுகள்
    X

    ஆனைமலை அருகே ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த மாடுகள்

    • காங்கயம், லம்பாடி காளைகள் அதிகளவில் பங்கேற்பு
    • வெற்றி பெற்ற காளையின் உரிமையாளருக்கு தங்கக்காசு, கோப்பை பரிசு

    பொள்ளாச்சி,

    நாட்டு மாடுகள் குறித்து விவசாயிகளிடமும், கால்நடை வளர்ப்பவர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆனைமலை அருகே நடைபெற்ற ரேக்ளா போட்டியில் தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து 400-க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் பங்கேற்றன.

    பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகே உள்ள அங்கல குறிச்சி கிராமத்தில் விவசாய நண்பர்கள் சார்பில் 3-ம் ஆண்டு ரேக்ளா பந்தயம் நடை பெற்றது. இதில் கோவை மாவட்டத்தின் ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், நெகமம், கிணத்துக்கிடவு, திருப்பூர் மாவட்டம், உடுமலை, தாராபுரம், செஞ்சேரி மலை, பல்லடம், திண்டுக்கல் மாவட்டத்தின் பழநி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தின் கொழிஞ்சாம்பாறை, சித்தூர், பகுதிகளில் இருந்து சுமார் 400-க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகளில் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

    200 மீ, 300 மீ என இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. காங்கயம் இன காளைகள் மற்றும் லம்பாடி காளைகள் அதிகளவில் பங்கேற்றன. வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்கக் காசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

    போட்டியில் இலக்கு நோக்கி சீறிப் பாய்ந்த காளைகளை, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பார்வையாளர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

    Next Story
    ×