என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தாய் மீது சைக்கிள் மோதியதில் ஆத்திரம்: முதியவரை அடித்து கொன்ற வாலிபர் கைது
  X

  தாய் மீது சைக்கிள் மோதியதில் ஆத்திரம்: முதியவரை அடித்து கொன்ற வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சைக்கிளில் வந்த ஆறுமுகம் எதிர்பாராத விதமாக ராஜாமணி மீது மோதினார்.
  • சிவகணேசனை விளம்பாவூர் அருகே கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.

  கடலூர்:

  கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சிறுநெசலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 63). இவர் நேற்று மாலை வேப்பூர் கடைவீதியில் இருந்து சைக்கிளில் தனது வீட்டுக்கு சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராஜாமணி என்பவர் சாலை ஓரமாக வேர்க்கடலை காயவைத்து கொண்டிருந்தார். பின்னர் சைக்கிளில் வந்த ஆறுமுகம் எதிர்பாராத விதமாக ராஜாமணி மீது மோதினார். இதனால் ஆத்திரமடைந்த ராஜாமணியின் மகன் சிவகணேசன் (வயது32) ஆறுமுகம் வீட்டிற்கு சென்று தனது தாயை ஏன் சைக்கிளால் மோதினாய் என கேட்டு ஆறுமுத்திடம் சண்டையிட்டு தாக்கினார். இதனால் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே மயங்கி கீழே விழுந்தார்..அருகில் இருந்தவர்கள் இதைபார்த்து அதிர்ச்சி அடைந்து ஆறுமுகத்தை சிகிச்சைக்காக வேப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

  அங்கு ஆறுமுகத்தை பரிசோதித்த டாக்டர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள சிவகணேசனை வலைவீசி தேடி வந்தனர். இந்த தேடுதல் வேட்டையில் போலீசார் சிவகணேசனை விளம்பாவூர் அருகே கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.

  Next Story
  ×