search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் 3.79 லட்சம் லிட்டர் உபயோகித்த சமையல் எண்ணை கொள்முதல்
    X

    கோவையில் 3.79 லட்சம் லிட்டர் உபயோகித்த சமையல் எண்ணை கொள்முதல்

    • சமையல் எண்ைணயை மறுசுழற்சி செய்து பயோ டீசலாகவோ, லூப்ரிகண்டாகவோ பயன்படுத்தும் திட்டம்.
    • பொது நிகழ்வுகளில் கைப்படாத உணவு உபரியாக இருப்பின் 9087790877 என்ற எண்ணில் அழைத்து தகவல் தெரிவிக்கலாம்.

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடந்தது.

    பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

    சுந்தராபுரம், வடவள்ளி உழவர் சந்தைகளுக்கு சுத்தமான காய்கறி, பழச்சந்தை சான்று பெறப்பட்டுள்ளது.

    இதுதவிர ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, சூலூர், குறிச்சி உழவர் சந்தைகள் இதேபோன்று சான்று பெற நடவடிக்கை எடுக்க வேளாண் வணிக துணை இயக்குனருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    உணவகங்கள், ஓட்டல்கள், இனிப்பு, கார வகை தயாரிப்பாளர்கள், தொழிற்சாலை கேண்டீன்களில் உணவு பொருட்களை தயாரிக்கும் போது சில இடங்களில் சமையல் எண்ணையை பலமுறை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர்.

    இதனால் உணவு செரிமான தன்மை குறைவு, கெட்ட கொழுப்பு, குடல் பாதிப்புகள் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    எனவே உபயோகித்த சமையல் எண்ணை உணவு பாதுகாப்பு துறையின் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மூலம் பெற்று மறுசுழற்சி செய்து பயோ டீசலாகவோ, லூப்ரிகண்டாகவோ பயன்படுத்தும் திட்டம் கோவையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் மூலம் நடப்பு நிதியாண்டில் 2022 ஏப்ரல் 2023 பிப்ரவரி வரை 3.79 லட்சம் லிட்டர் உபயோகப்படுத்தப்பட்ட சமையல் எண்ணை பெறப்பட்டுள்ளது.

    இத்திட்டத்துக்கு பதிவு செய்து வழங்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் முகவர்களை தொடர்பு கொள்ளலாம். உபரி உணவை வீணாக்காமல் பகிர்வோர் திட்டம், நோ புட் வேஸ்ட் என்ற தன்னார்வ அமைப்பின் உதவியுடன் கோவையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    எனவே திருமண விழாக்கள் உள்ளிட்ட வீட்டு விஷேசங்கள், பொது நிகழ்வுகளில் கைப்படாத உணவு உபரியாக இருப்பின் 9087790877 என்ற எண்ணில் அழைத்து தகவல் தெரிவிக்கலாம்.

    தரம் குறைவான உணவு, கலப்பட டீத்தூள், கலப்பட எண்ணை, அளவுக்கு அதிகமான செயற்கை வண்ணம் கலந்த உணவுகள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்வது தெரிந்தால் பொதுமக்கள் 94440 42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்செல்வன், ஓட்டல், பேக்கரி உரிமையாளர்கள், சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×