search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காட்டில் புரட்சி பாரதம் ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புரட்சி பாரதம் கட்சியினர்.

    களக்காட்டில் புரட்சி பாரதம் ஆர்ப்பாட்டம்

    • சுப்பிரமணியபுரத்தில் சாக்கடை கழிவுகளால் சேதமான சாலையை சீரமைக்க கோரிக்கை
    • 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    களக்காடு:

    களக்காட்டில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில், களக்காட்டை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா அறிவிக்கவேண்டும், சுப்பிரமணியபுரத்தில் சாக்கடை கழிவுகளால் சேதமான சாலையை சீரமைக்க வேண்டும், களக்காட்டில் உள்ள உப்பாறு, குடிதாங்கிகுளம், மாணிக்கன் குளம் ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும், குடிதாங்கி குளத்தில் ரேசன்கடை கட்ட முயற்சி செய்வதை தடுக்க வேண்டும், உப்பாற்றில் குப்பை கழிகள் கொட்டுவதை தடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் ஆகிய 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாவட்ட இளைஞரணி செயலாளர் அர்ஜுன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நெல்சன், மாவட்டத் தலைவர் முகமது காஸிர், களக்காடு ஒன்றிய செயலாளர் இன்பரசு, களக்காடு ஒன்றிய மகளிரணி செயலாளர் கனகராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிரணி செயலாளர் ரேணுகா வரவேற்றார்.

    இதில் விவசாய சங்க மாநில துணை தலைவர் பெரும்படையார், திருவாடுதுறை ஆதீன குத்தகை விவசாயிகள் மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு சங்க தலைவர் டாக்டர்.பகத்சிங் முகமது, திராவிடத் தமிழர் கட்சி மாநில பொதுச்செயலாளர், கதிரவன், மனிதநேய மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் சித்திக் அஸிஸீர் ரஹ்மான், தென்னக மக்கள் முன்னேற்ற கழகம் நிறுவனத் தலைவர் சுதாகரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    Next Story
    ×