என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மெளண்ட் சீயோன் மெட்ரிக்குலேஷன் மேல் நிலைப்பள்ளியின் மாணவர்கள் நடந்து முடிந்த 2016 ஆம் கல்வியாண்டிற்கான 10–ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் அபார சாதனை படைத்துள்ளனர்.
நடந்து முடிந்த 2016 – ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மெளண்ட் சீயோன் பள்ளி 300–க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டு தேர்வு எழுதி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
மாணவி ஆலின் அமலா, சார்லட் பெஸ்ஸி சகாயா, சு.விக்னேஷ்வரன் ஆகிய மூன்று மாணவர்கள் 500–க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாமிடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பெற்று அபார சாதனை படைத்துள்ளனர். விக்னேஷ் என்ற மாணவன் 500–க்கு 496 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாமிடத்தையும், இந்துமதி, கார்த்திகா, ஜனோபியா பேகம், ஐஸ்வர்யா, விஷால் சாம் பிரான் சிஸ் ஆகியோர் 500–க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் மூன்றா மிடத்தையும் தட்டிச் சென்றனர்.
மேலும்,பாட வாரியாக ஆங்கிலத்தில் ஒரு மாணவரும், கணிதம் பாடத்தில் 31 மாணவர்களும், அறிவியல் பாடத்தில் 35 மாணவர்களும், சமூக அறிவியல் பாடத்தில் 62 மாணவர்களும் என்ற கணக்கில் மாவட்டத்திலேயே அதிகமான எண்ணிக்கையில் 100–க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்து, பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
பள்ளியில் 490 மதிப் பெண்களுக்கு மேல் 24 பேரும், 480 மதிப்பெண்களுக்கு மேல் 98 பேரும், 470 மதிப்பெண்களுக்கு மேல் 119 பேரும், 460 மதிப்பெண்களுக்கு மேல் 152 பேரும், 450 மதிப் பெண்களுக்கு மேல் 189 பேரும் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் அரும் பெரும் சாதனைப் படைத்த மாணவர்களைப் பள்ளியின் முதுநிலை முதல்வர் டாக்டர். ஜோனத்தன் வெகுவாகப் பாராட்டினார்.
கமுதி:
ராமநாதபுரம மாவட்டம், கமுதி போலீஸ் சரகம் முதல் நாட்டைச் சேர்ந்த சுந்தரம் மகன் முத்துக்குமாரநாதன் (வயது 37) இவர் 7 ஆண்டுகளுக்கு முன்பு கவிதா (32) என்ற பெண்ணை திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் அதிகமான நகைகள் வரதட்சணை வாங்கி வரும்படி மனைவியை, கணவர் கொடுமைப் படுத்தியுள்ளார். இதற்கு கணவரின் குடும்பத்தினர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கமுதி மகளிர் போலீசில் கவிதா புகார் செய்தார். இதையடுத்து போலீஸ் ஏ.டி.எஸ்.பி. ஷேக்முக்சேகர் சஞ்சய் உத்தரவின் பேரில் முத்துக்குமாரநாதன், இவரது பெற்றோர் சுந்தரம், ராஜம்மாள், அண்ணன் செல்லச்சாமி, இவரது மனைவி தமிழரசி ஆகியோர் மீது இன்ஸ்பெக்டர் முருகன், சப்–இன்ஸ்பெக்டர்கள் முருகன், ஜான்சிராணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்திய தேர்தல் ஆணையம் தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிப்பை கடந்த மார்ச் 4–ம் தேதி வெளியிட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் திங்கள் கிழமைதோறும் நடத்தப்பட்டு வந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டம், மாதந்தோறும் நடைபெறும்.
விவசாயிகள் குறைதீர் கூட்டம், மனு நீதி நாள் முகாம், நலத்திட்ட உதவி வழங்கும் முகாம் ஆகியவை அனைத்து மாவட்டங்களிலும் நிறுத்தப்பட்டன. அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதிவாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் தங்களது மனுக்களைப் போட மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெட்டி வைக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் மனுக்களைப் போட்டு வந்தனர்.
இதற்கிடையே வாக்குப்பதிவு கடந்த 16–ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 19–ம் தேதியும் நடைபெற்றன. தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்துள்ளன. இதையடுத்து அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் திங்கள் கிழமைதோறும் நடத்தப்படும். அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.மாரிமுத்து தலைமையில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 95 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மேலும் இம்மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு சம்மந்தப்பட்ட அலுவலரிடம் வழங்கப்பட்டுள்ளது. இனி வாரந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது என தனித்துணை ஆட்சியர் சூரியகலா தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை அருகே உள்ள அடப்பகாரசத்திரம் என்ற இடத்தில் டாஸ்மாக் பார் உள்ளது. இந்த பாரில் சத்தியமங்கலத்தை சேர்ந்த ராமசாமி (வயது 45) என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை திருவப்பூரை சேர்ந்த சுப்ரமணியன் (45), வெள்ளைசாமி(31) ஆகிய இருவரும் அந்த டாஸ்மாக் பாருக்கு மது அருந்த வந்தனர். பின்னர் அவர்கள் வாங்கி சாப்பிட்ட தின்பண்டங்களுக்கான பணத்தை ராமசாமி கேட்டார். அதற்கு 2 பேரும் பணம் தர மறுத்தனர். இதனால் அவர்கள் 3 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது மதுபோதையில் இருந்த சுப்பிரமணியனும், வெள்ளைசாமியும் சேர்ந்து ராமசாமியை தாக்கினர். இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீசில் ராமசாமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்ரமணியன், வெள்ளைசாமி ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் இதயத்துல்லா நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைய உள்ளது. கடந்த 5 ஆண்டுகால நடவடிக்கை போல் இல்லாமல் தி.மு.க. காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அ.தி.மு.க.தான் தமிழகம் முழுவதும் தேர்தலின் போது பணப்பட்டுவாடா நிகழ்த்தியது. தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின்போது தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி முன்னணியில் உள்ள பல தொகுதிகளில் முடிவினை அறிவிக்க தேர்தல் அதிகாரிகள் காலதாமதப்படுத்தினர்.
4 நாட்களுக்கு முன்பிருந்தே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபடாமல் பணப்பட்டுவாடாவிற்கு உதவி செய்துள்ளனர். இருப்பினும் கடந்த தேர்தலில் 203 இடங்களை வென்ற அ.தி.மு.க. தற்போது 134 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. இது தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.
அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில் அதிக அளவில் பணப்பட்டுவாடா செய்தது அ.தி.மு.க.தான். தவறு ஆளுங்கட்சி பக்கம் இருக்கும் போது 2 தொகுதிகளிலும் தேர்தலை தள்ளி வைத்தது ராஜ்யசபா தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றுவிடும் என்பதற்காகத் தான்.
2 தொகுதிகளின் தேர்தலை ஒத்திவைத்தது போல் ராஜ்யசபா தேர்தலையும் தேர்தல் ஆணையம் தள்ளி வைக்கவேண்டும். அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தொகுதி தேர்தலை நடத்தி முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தலை ஆணையம் நடத்தவேண்டும்.
தேர்தலின் போது பணத்தை பெற்றுக்கொண்டு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்தார் என்ற குற்றச்சாட்டை நான் வைத்திருந்தேன். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளதால் தற்போது எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கீரனூர்:
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையம் செல்லும் வழியில் பாழ டைந்த கட்டிடம் உள்ளது. நேற்று அந்த கட்டிடத்தை சுற்றியுள்ள முட்புதரில் ஒரு பெரிய துணி பை கிடந்தது. அதிலிருந்து துர்நாற்றம் வீசிக் கொண்டே இருந்தது.
இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் அருகில் சென்று பார்த்த போது, அந்த பையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிறந்து 2 நாட்களே ஆன ஒரு ஆண் குழந்தை உடல் இருந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து கீரனூர் போலீசா ருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத் திற்கு போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் அந்த குழந்தையின் உடல் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் புதைக்கப்பட்டது.
அந்த குழந்தையின் உடல் அங்கு எப்படி வந்தது? தவறான முறையில் பெற்றெடுத்த தாய் குழந்தையை கொன்று வீசினாரா? அல்லது நரபலி கொடுக்கப்பட்டதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக கார்த்திக் தொண்டைமான், தி.மு.க. வேட்பாளராக பெரியண்ணன் அரசு ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் தொகுதியை தக்க வைத்துக்கொள்ள அ.தி.மு.க. வேட்பாளரும், ஏற்கனவே இருமுறை போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த தி.மு.க. வேட்பாளர் இம்முறையாவது வெற்றி பெற வேண்டுமெனவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தி.மு.க.வின் பெரியண்ணன் அரசு 2,084 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பெரியண்ணன்அரசு 66,739 வாக்குகளும், கார்த்திக் தொண்டைமான் 64,655 வாக்குகளும் பெற்றனர். மேலும் சுயேட்சை வேட்பாளர் சொக்கலிங்கம் 22,973, தே.மு.தி.க. வேட்பாளர் ஜாகிர் உசேன் 7,810 வாக்குக ளும் பெற்றனர்.
புதுக்கோட்டைதொகுதியில் அ.தி.மு.க.வை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்ட சொக்கலிங்கம் 22,973 வாக்குகளை பெற்றார். பெரும்பாலும் அவர் பெற்ற வாக்குகள் அ.தி.மு.க.வினரின் வாக்குகள் என கூறப்படு கிறது.
முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்ஒருவர், தன்னை ஜாதியை கூறி திட்டிவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சொக்க லிங்கம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினார்.
இதையடுத்து சொக்கலிங்கம், அவரது மனைவி கங்கையம்மாள் ஆகியோரை அ.தி.மு.க.வில் இருந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா நீக்கினார்.
இந்நிலையில் சொக்கலிங்கம் சுயேட்சையாக போட்டியிட்டதால் புதுக்கோட்டையில் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.
புதுக்கோட்டை:
வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களிலும் கடந்த 3 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் பெய்த மழையில் அதிகபட்சமாக கந்தர்வக்கோட்டையில் 72 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
கட்டுமாவடி, இலுப்பூர், கீரனூர், மழையூர், மணமேல் குடி, நாகுடி, விராலிமலை, காரையூர், ஆதனக்கோட்டை, மீமிசல், ஆயிங்குடி, பெருங்களூர், ஆலங்குடி, திருமயம், பொன்னமராவதி, அரிமளம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, அன்னவாசல், ஆவுடையார்கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
இதனிடையே புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவித்தது.
இதையடுத்து கட்டுமாவடி, புதுக்குடி, அய்யம்பட்டினம், மணமேல்குடி, முத்துக்குடா, ஆர்.புதுப்பட்டினம் உள்பட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 7 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
இதனால் நாட்டு படகுகள் அனைத்தும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இன்று காலை புதுக்கோட்டை மாவட்டத்தில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை.
திருச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று விட்டு விட்டு லேசாக மழை பெய்தது. இன்று காலை லேசான தூறலுடன் மழை பெய்தது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-
புள்ளம்பாடி-2.4, நந்தியாறு -4.2, கல்லணை-5.6, ஏர்போர்ட்-8.1, முசிறி-22.6 துவாக்குடி-4.
கடந்த வாரம் திருச்சி மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்தது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதேபோல் அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களிலும் நேற்று லேசான தூறலுடன் மழை பெய்தது.
புதுக்கோட்டை:
மாவட்டத்தின் 6 தொகுதிகளில் 6,16,674 ஆண் வாக்காளர்களும், 621801 பெண் வாக்காளர்களும், 18 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 12,38,493 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 4,54,545 பேரும், பெண்களில் 4,99,963 பேரும் மொத்தம் 9,54,508 பேர் வாக் களித்தனர். மொத்த வாக்குப் பதிவு சதவிகிதம் 77.24 ஆகும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குகள் பதிவான எந்திரங்களை புதுக்கோட்டை மாவட்ட அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்து.
இந்த எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு இந்திய துணை ராணுவத்தினர் மற்றும் தமிழக போலீசார் 3 அடுக்கு பாதுகாப்பில் ஈடுப்பட்டுள்னர்.






