என் மலர்
செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாரந்தோரும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் இனி வாரந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது என தனித்துணை ஆட்சியர் சூரியகலா தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
இந்திய தேர்தல் ஆணையம் தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிப்பை கடந்த மார்ச் 4–ம் தேதி வெளியிட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் திங்கள் கிழமைதோறும் நடத்தப்பட்டு வந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டம், மாதந்தோறும் நடைபெறும்.
விவசாயிகள் குறைதீர் கூட்டம், மனு நீதி நாள் முகாம், நலத்திட்ட உதவி வழங்கும் முகாம் ஆகியவை அனைத்து மாவட்டங்களிலும் நிறுத்தப்பட்டன. அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதிவாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் தங்களது மனுக்களைப் போட மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெட்டி வைக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் மனுக்களைப் போட்டு வந்தனர்.
இதற்கிடையே வாக்குப்பதிவு கடந்த 16–ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 19–ம் தேதியும் நடைபெற்றன. தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்துள்ளன. இதையடுத்து அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் திங்கள் கிழமைதோறும் நடத்தப்படும். அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.மாரிமுத்து தலைமையில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 95 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மேலும் இம்மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு சம்மந்தப்பட்ட அலுவலரிடம் வழங்கப்பட்டுள்ளது. இனி வாரந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது என தனித்துணை ஆட்சியர் சூரியகலா தெரிவித்துள்ளார்.

Next Story