என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை தொகுதியில் சுயேட்சை வேட்பாளரால் வெற்றியை இழந்த அ.தி.மு.க.
    X

    புதுக்கோட்டை தொகுதியில் சுயேட்சை வேட்பாளரால் வெற்றியை இழந்த அ.தி.மு.க.

    புதுக்கோட்டை தொகுதியில் சொக்கலிங்கம் சுயேட்சையாக போட்டியிட்டதால் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை பறித்துள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக கார்த்திக் தொண்டைமான், தி.மு.க. வேட்பாளராக பெரியண்ணன் அரசு ஆகியோர் போட்டியிட்டனர்.

    இதில் தொகுதியை தக்க வைத்துக்கொள்ள அ.தி.மு.க. வேட்பாளரும், ஏற்கனவே இருமுறை போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த தி.மு.க. வேட்பாளர் இம்முறையாவது வெற்றி பெற வேண்டுமெனவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தி.மு.க.வின் பெரியண்ணன் அரசு 2,084 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பெரியண்ணன்அரசு 66,739 வாக்குகளும், கார்த்திக் தொண்டைமான் 64,655 வாக்குகளும் பெற்றனர். மேலும் சுயேட்சை வேட்பாளர் சொக்கலிங்கம் 22,973, தே.மு.தி.க. வேட்பாளர் ஜாகிர் உசேன் 7,810 வாக்குக ளும் பெற்றனர்.

    புதுக்கோட்டைதொகுதியில் அ.தி.மு.க.வை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்ட சொக்கலிங்கம் 22,973 வாக்குகளை பெற்றார். பெரும்பாலும் அவர் பெற்ற வாக்குகள் அ.தி.மு.க.வினரின் வாக்குகள் என கூறப்படு கிறது.
    முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்ஒருவர், தன்னை ஜாதியை கூறி திட்டிவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சொக்க லிங்கம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினார்.

    இதையடுத்து சொக்கலிங்கம், அவரது மனைவி கங்கையம்மாள் ஆகியோரை அ.தி.மு.க.வில் இருந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா நீக்கினார்.
    இந்நிலையில் சொக்கலிங்கம் சுயேட்சையாக போட்டியிட்டதால் புதுக்கோட்டையில் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×