என் மலர்
செய்திகள்

ராஜ்யசபா தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்: காங். செய்தி தொடர்பாளர் பேட்டி
தமிழகத்தில் 2 தொகுதிகளின் தேர்தலை ஒத்திவைத்தது போல் ராஜ்யசபா தேர்தலையும் தள்ளிவைக்க வேண்டும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் இதயத்துல்லா நிருபர்களிடம் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் இதயத்துல்லா நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைய உள்ளது. கடந்த 5 ஆண்டுகால நடவடிக்கை போல் இல்லாமல் தி.மு.க. காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அ.தி.மு.க.தான் தமிழகம் முழுவதும் தேர்தலின் போது பணப்பட்டுவாடா நிகழ்த்தியது. தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின்போது தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி முன்னணியில் உள்ள பல தொகுதிகளில் முடிவினை அறிவிக்க தேர்தல் அதிகாரிகள் காலதாமதப்படுத்தினர்.
4 நாட்களுக்கு முன்பிருந்தே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபடாமல் பணப்பட்டுவாடாவிற்கு உதவி செய்துள்ளனர். இருப்பினும் கடந்த தேர்தலில் 203 இடங்களை வென்ற அ.தி.மு.க. தற்போது 134 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. இது தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.
அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில் அதிக அளவில் பணப்பட்டுவாடா செய்தது அ.தி.மு.க.தான். தவறு ஆளுங்கட்சி பக்கம் இருக்கும் போது 2 தொகுதிகளிலும் தேர்தலை தள்ளி வைத்தது ராஜ்யசபா தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றுவிடும் என்பதற்காகத் தான்.
2 தொகுதிகளின் தேர்தலை ஒத்திவைத்தது போல் ராஜ்யசபா தேர்தலையும் தேர்தல் ஆணையம் தள்ளி வைக்கவேண்டும். அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தொகுதி தேர்தலை நடத்தி முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தலை ஆணையம் நடத்தவேண்டும்.
தேர்தலின் போது பணத்தை பெற்றுக்கொண்டு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்தார் என்ற குற்றச்சாட்டை நான் வைத்திருந்தேன். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளதால் தற்போது எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story