என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக கலெக்டர் கவிதா ராமு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்ததாவது:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழா 2021 ஆம் ஆண்டில் 120 கிராமங்கள் அரசிதழில் சேர்க்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி இதுவரையில் 8 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளது.

    அரசிதழில் பதிவு செய்யப்பட்டுள்ள கிராமங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு விழாக்கள் நடத்தப்படவும், குறிப்பிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு விழாக்கள் விதிமீறல்கள் ஏதுமின்றி நடத்தப்படுவதை கண்காணிக்க கோட்ட அளவில் குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

    இதன்படி ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர், கால்நடை பராமரிப்புத்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவத்துறை, காவல்துறை, உள்ளாட்சித் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை உரிய முறையில் செயல்படுத்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் கோவிட்&19 நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்திடும் வகையில்  பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும் உரிய முறையில் செயல்படுத்த வேண்டும்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை உரிய விதிமுறைகளின்படி சிறப்பாக நடத்தி முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.சம்பத், வருவாய் கோட்டாட்சியர் அபிநயா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    ஜல்லிக்கட்டு குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற காட்சி.
    புதுக்கோட்டையில் வயதான இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் எனப்படும் கூடுதல் தடுபபூசி செலுத்தும் பணியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகர்மன்றத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் சுகாதாரப்பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை கூடுதல் தவணை கோவிட் தடுப்பூசி திட்டத்தை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர்  கவிதா ராமு தலைமை தாங்கினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 7,638 சுகாதாரப் பணியாளர்களும், 3,015 களப்பணியாளர்களும், 60 வயதிற்கு மேற்பட்ட 2,45,837 நபர்கள் இரண்டு தவணைகளும் தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர்.

    தொடர்ந்து மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்களில் சுகாதாரப்பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது என அமைச்சர்கள் தெரிவித்தனர்.

    இதில் டாக்டர் வை.முத்துராஜா எம்.எல்.ஏ., முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் நைனாமுக
    அறந்தாங்கி அருகே அரசு கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் தாலுகா பெருநாவலூரில் அரசு கலை மற்றும் அறிவியல் இயங்கி வருகிறது. இக்கல்லூரியின் 7-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் கண்ணன் ஏற்ப்பாட்டில் கல்லூரி திறந்தவெளி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் தலைமை தாங்கி 550 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

    இளங்கலையில் 450 பேரும், முதுகலையில் 100 பேரும் என மாணவ, மாணவிகள் வரிசையாக பட்டங்களை பெற்றுச்சென்றனர். இதில் மதிப்பெண் அடிப்படையில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கான நற்பண்புகள் குறித்து உறுதி மொழியேற்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம், ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், மாவட்டக்குழு    உறுப்பினர் சரிதா மேகராஜன், கூட்டமைப்பு தலைவர் மணிமொழியன்,

    கல்லூரித்துறை தலைவர்கள் திருவாசகம், கணேசன், ராஜேந்திரன், நாராயணசாமி, டேவிட் கலைமணிராஜ், கிளாடிஸ், சிற்றரசு உள்ளிட்ட மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மொய் விருந்து நிகழ்ச்சி நடத்த கலெக்டர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மொய் விருந்து நிகழ்ச்சி ஆண்டு தோறும் ஆடி மாதம் நடத்தப்படுவது வழக்கம். கோடிகளை அள்ளிக்குவிக்கும் இந்த நிகழ்ச்சி சம்பிரதாய அடிப்படையில் நடத்தப்படுகிறது.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவின் கோர தாண்டவத்தால் அனைத்து தொழில்களும் முடங்கியிருந்தன. மேலும் மக்களிடம் பணப்புழக்கமும் குறைந்திருந்தது. மேலும் கொரோனா பரவல் காரணமாக மொய் விருந்து நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படவில்லை.

    இந்த அண்டு ஒரு சில இடங்களில் மொய் விருந்து என்று பெயரிடாமல் பிறந்தநாள் விழா, காதணி விழா என்ற பெயர்களுடன் மொய் விருந்து நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் அதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இதற்கிடையே தற்போது கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது.

    இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
    புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது  கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் மொய் விருந்து நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

    எனவே மேற்படி மொய் விருந்து நடத்துவதை தவிர்க்கும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மொய் விருந்து நடத்த திருமண மண்டபங்களுக்கு தடை உள்ளது.
    மீறினால் மேற்படி மொய் விருந்து நடத்தும் திருமண மண்டபங்களின் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188&ன் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் ரகுபதி, பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கினார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்  பணிகளை சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார்.
    இந்நிகழ்ச்சிகள் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், பேரையூர் ஊராட்சி, பிலாக் குடிப்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலையரங்கம் மற்றும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி,

    பேரையூரில் மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம், தூய்மை பாரத இயக்க திட்டத்தின்கீழ் ரூ.5.25லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய சுகாதார வளாகம், மல்லாங்குடியில் 14&வது நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ் ரூ.4.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி ஆகிய வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் ரகுபதி தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

    தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் அடிப்படை தேவைகளில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதிலும், ஏழை, எளிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழ்நாடு முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார்.

    கொரோனா 3 ஆம் அலை தடுப்பு பணிகளை முதல்வர் முனைப்புடன் மேற்கொண்டு  வருகிறார். கிராமங்களின் வளர்ச்சியே ஒரு நாட்டின் வளர்ச்சி என்பதை கருத்தில் கொண்டு குடிநீர், சாலை, மின்விளக்கு போன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தருவ தில் தமிழக முதல்வர் நல்லாட்சி செய்து வருகிறார். இத்திட்டப்பணிகளை பொதுமக்கள் அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

    மேலும் கோட்டூர், பனையப்பட்டி, மேலப்பனையூர் ஆகிய ஊராட்சிகளில் தமிழக அரசின் விலையில்லா வேட்டி, சேலைகள் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்புகளையும் பயனாளிகளுக்கு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார்.

    மேலப்பனையூரில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார்.
    ஆலங்குடி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    தஞ்சசை மாவட்டம் பேராவூரணி வத்தலக்காடு பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் மனைவி சந்திரா (வயது 45). இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கீரமங்கலம் பர்மா காலனியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்திருந்தார்.

    அப்போது தன் சகோதரியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, வீட்டில் இருந்த  மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். மளமளவென தீ பற்றி எரிய தொடங்கியதும், வலி தாங்கமுடியாமல் சந்திரா கதறினார்.

    இதனை பார்த்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அணைத்து படுகாயங்களுடன் சந்திராவை, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரா உயிரிழந்தார்.

    இச்சம்பவம் குறித்து சந்திராவின் மகள் கொடுத்த புகாரின் பே
    தமிழகத்தில் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்து, அரசு அரசாணை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசை கோரி வருகின்றனர்
    புதுக்கோட்டை:

    தமிழக அரசு பள்ளிகளில் 2012&ம் ஆண்டு 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் உடற்கல்வி, ஓவியம் மற்றும் தொழிற்கல்வி பாடங்கள் கணினிஅறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் ஆகிய எட்டு துறைகளில் 5000 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணி அமர்த்தப்பட்டார்கள். 

    பின்னர் அவர்களுக்கு சம்பளம் படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இவர்களில் 12 ஆயிரம் பேர் மட்டுமே தற்போது பணிபுரிந்து வருகிறார்கள்.

    இந்த ஆசிரியர் தரப்பில் தங்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதை தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்து, பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து புதுக்கோட்டையில், தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் கூறியதாவது: 

    2022&ம் ஆண்டு புத்தாண்டை ஒட்டி, ஜனவரி 5 ஆம் தேதி முதல் நடந்த சட்டசபை கூட்டத்தில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உள்ள பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் குறித்து ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் கேள்விக்கு, பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பதில் சொல்லும்போது, தேர்தல் அறிக்கையின்படி பணி நிரந்தரம் செய்வோம் என உறுதி செய்துள்ளார். 

    தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் சட்டசபையில் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை வைத்தார். எனவே முதல்வர்,  தமிழக அரசின் கொள்கை முடிவாக 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வதற்கான அரசாணையை வெளியிட்டு, அவர்களது வாழ்க்கையில் விடியல் கிடைக்க வேண்டுகிறோம் என்றார்.
    ஆலங்குடி அருகே வன்னியன்விடுதியில் ஜல்லிக்கட்டு நடத்த முறையான அறிவிப்பை கலெக்டர் வெளியிட வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டுதோறும் 50&க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக போட்டிகள் நடத்தப்படவில்லை.

    இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது கேள்விக்குறியாக உள்ளது. இந்த ஆண்டு மாவட்ட நிர்வாகம் முறையான அறிவிப்பு வெளியிடுமா? என்று  எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் தமிழக அரசும் ஜல்லிக்கட்டை நடத்தலாம், ஆனால் பார்வையாளர்கள் இல்லாமல் நடத்த வேண்டும் என்று அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள  வன்னியன்  விடுதி கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு இவ்வாண்டும்  நடைபெறும் என்று கிராமத்தை சேர்ந்தவர்கள் வாடிவாசல் அமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    மாவட்ட கலெக்டர் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு பரிந்துரை செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஆலங்குடி அருகே வன்னியன் விடுதியில் தைப்பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக வாடிவாசல் ஏற்பாடுகள் தயாராக வருகின்றன.

    பார்வையாளர்களுடன் நடத்துவதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு விழா தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கறம்பக்குடி அருகே சேற்று மண்ணுடன் குடிநீர் வினியோகிக்கப்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கந்தர்வ கோட்டை ஒன்றியம் துவார் ஊராட்சியை சேர்ந்த குளவாய்பட்டி கிராமம் உள்ளது. இங்கு 150&க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இவர்களின் குடிநீர் தேவைக்காக 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி செயல்பட்டு வருகிறது. இதில் இருந்து வினியோகிக்கப்படும் குடிநீர் கடந்த 10 நாட்களாக சேற்று மண்ணுடன் கலங்கலாக வருகிறது. 

    இது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் குடிநீரை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே குடிநீர் தொடர்ந்து கலங்கலாக வருவதற்கான காரணத்தை கண்டறிந்து அதை சரி செய்து பாதுகாப்பான குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    குடும்ப அட்டையில் பெயர் திருத்தம் மற்றும் புதிய குடும்ப அட்டை வழங்குவதற்கு பொதுமக்களிடம் கட்டாய லஞ்சம் கேட்பதாக வட்ட வழங்கல் அதிகாரி மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், வட்ட வழங்கல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வட்ட வழங்கல் அதிகாரியாக முருகேசன் என்பவர் பணியாற்றி வருகிறார்.

    தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் ஆவுடையார்கோவிலுக்கு மாறுதலாகி வந்துள்ளார். இந்தநிலையில் குடும்ப அட்டையில் பெயர் திருத்தம் மற்றும் புதிய குடும்ப அட்டை வழங்குவதற்கு பொதுமக்களிடம் கட்டாய லஞ்சம் கேட்பதாக இவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

    குறிப்பாக புதிய குடும்ப அட்டைக்கு ரூ.1000, பெயர் சேர்க்க ரூ.500, பெயர் திருத்தம் செய்ய ரூ.200 என நிர்ணயம் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஆவுடையார்கோவில் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்ப அட்டையில் பெயர் திருத்தம் செய்வதற்காக ஆவுடையார்கோவில் வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

    அப்போது வட்ட வழங்கல் அதிகாரி முருகேசன் அவரிடம் ரூ.200 லஞ்சம் கேட்டுள்ளார். வேறு வழியின்றி ரூ.200 கொடுத்து அந்தப் பெண் தனது வேலையை முடித்துக் கொண்டு சென்றுள்ளார். இதனை சில நபர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

    இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டர் கவிதா ராமு விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    இதற்கிடையே லஞ்சம் வாங்கியதாக வீடியோ வெளியான நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார்.
    புதுக்கோட்டையில் ஊரடங்கை மீறி இறைச்சி விற்பனை செய்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    புதுக்கோட்டை:
    தமிழக அரசு கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கினை அறிவித்துள்ளது. அதன்படி புதுக்கோட்டையில் வணிக கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. ஆட்டோக்களும் இயக்கப்படவில்லை.

    அத்தியாவசிய பொருட்களான பால், மருந்து கடைகள் திறந்திருந்தன. ஊரடங்கை கடைபிடிக்காமல் தேவையில்லாமல் வெளியில் திரிந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர். காய்கறி மார்க்கெட்டுகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தது. சில இடங்களில் இறைச்சி விற்பனை செய்யப்பட்டது. அவர்கள் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டது.

    பேருந்துகள் இயக்கப்படாத காரணத்தினால் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. உணவு கூடங்களில் பார்சலில்  உணவுப்  பொருட்கள் விற்கப்பட்டது. அதிகளவில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
    பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த மாமனார் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஈஸ்வரி நகரை சேர்ந்தவர் குமார். ராணுவ வீரரான இவருக்கும் புவனேஸ்வரி (வயது36) என்பவருக்கும் 15 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைப்பெற்றது. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளன. குமார் 8 மாதங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். 

    இந்நிலையில் புவனேஸ்வரி கீரனூர் மகளிர் காவல் நிலையத்தில் இன்று ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில்,
    புதுக்கோட்டை அசோக் நகரில் உள்ள எனது கணவர் குமாரின் தந்தை வெள்ளைக்கண்ணு, அவரது மனைவி பூவாயி, மகன் வைரமணி, மகள் கீர்த்திகா ஆகியோர் என்னை கொடுமை படுத்தி தாக்குகின்றனர். மேலும்  தனது ஆசைக்கு இனங்க கூறி, வெள்ளைக்கண்ணு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என்று புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

     புகாரின் பேரில், கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையம்  இன்ஸ்பெக்டர் லதா,  மாமனார் வைரக்கண்ணு உட்பட  4 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார். 
    ×