என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    கந்தர்வக்கோட்டை பகுதியில் கால்நடை சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு மருத்துவமுகாம் நடை பெற்றது.
    புதுக்கோட்டை: 


    கந்தர்வகோட்டை ஒன்றியம் குளத்தூர் நாயக்கர் பட்டி கால்நடை மருந்தக எல்லைக்கு உட்பட்ட பருக்கை விடுதி கிராமத்தில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 

    முகாமிற்கு நடுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜெயந்தி அனைவரையும் வரவேற்றார். முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் செந்தில் ராஜன், செந்தில்குமார், தினேஷ் குமார், பிரசாத், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் அடங்கிய குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.   

    முகாமில் 450 கால்நடைகளுக்கு தடுப்பூசி, குடற்புழு நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை மற்றும் கால்நடைகளுக்கு ஆண்மை நீக்கம் போன்ற சிகிச்சை அளிக்கப்பட்டது. 

    முகாமில் சிறந்த கிடாரி கன்றுகளுக்கும், வளர்த்த விவசாயிகளுக்கும் விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. முகாமில் அனைத்து கறவை மாடுகளுக்கு தாது உப்பு கலவை வழங்கப்பட்டது.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 4,75,052 ரேசன் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:&
    தமிழ்நாடு முதலமைச்சர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும்  குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க உத்தரவிட்டார். 

    இதன்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி 1 கிலோ, வெல்லம் 1 கிலோ, முந்திரி 50 கிராம், ஒரு முழு கரும்பு  உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு  பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 4,82,187 அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 968 குடும்பங்களுக்கும் ஆக மொத்தம் 4,83,155 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

    அதன்படி 04.01.2022 முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள 1,028 நியாயவிலைக் கடைகளின் மூலம் புதுக்கோட்டை வட்டத்தில் 64,915 எண்ணிக்கையிலும்,  கந்தர்வக்கோட்டை வட்டத்தில் 25,335 எண்ணிக்கையிலும், குளத்தூர் வட்டத்தில் 41,963 எண்ணிக்கையிலும், திருமயம் வட்டத்தில் 47,489 எண்ணிக்கையிலும், பொன்னமராவதி வட்டத்தில் 31,206 எண்ணிக்கையிலும் வழங்கப்பட்டுள்ளது. 

    ஆலங்குடி வட்டத்தில் 48,102 எண்ணிக்கையிலும், அறந்தாங்கி வட்டத்தில் 59,409 எண்ணிக்கையிலும், கறம்பக்குடி வட்டத்தில் 31,934 எண்ணிக்கையிலும், மணமேல்குடி வட்டத்தில் 28,846 எண்ணிக்கையிலும், ஆவுடையார்கோவில் வட்டத்தில் 27,012 எண்ணிக்கையிலும், விராலிமலை வட்டத்தில் 30,245 எண்ணிக்கையிலும், இலுப்பூர் வட்டத்தில் 38,596 எண்ணிக்கையிலும் என மொத்தம் 4,75,052 அரிசி பெறும் குடும்ப  அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

    மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாம்களான, ஆலங்குடி வட்டம், தோப்புக்கொல்லையில் 431 எண்ணிக்கையிலும், அறந்தாங்கி வட்டம், அழியாநிலையில் 233 எண்ணிக்கையிலும், திருமயம் வட்டம், தேக்காட்டூரில் 293 எண் ணிக்கையிலும் என மொத்தம் 957 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    அறந்தாங்கி அருகே ஊதியம் வழங்காத ஆத்திரத்தில் வட்டார கல்வி அலுவலகத்தை ஆசிரியை சூறையாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த மணமேல்குடி பகுதியைச் சேர்ந்தவர் தைலம்மை. இவர் மணமேல்குடி அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 

    இந்நிலையில் இவர் பள்ளிக்கு முறையாக வருவதில்லை, அதிகாரிகளுக்கு முறையாக  பதில் அளிப்பதில்லை  என்ற  பல்வேறு காரணங்களால், வட்டாரக்கல்வி  அலுவலர்களால்  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

    இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் தைலம்மை, மணமேல்குடியிலுள்ள வட்டாரக் கல்வி அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருந்த கணிணி உள்ளிட்ட பொருட்களை கீழே தள்ளி உடைத்துள்ளார். மேலும் அங்கிருந்த ஆவணங்களை தூக்கியெறிந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். 

    அதோடு மட்டுமல்லாது அங்குள்ள யாரும் வேலை செய்யக்கூடாது என அலு வலர்களை மிரட்டியுள்ளார். இதன் வீடியோ தற்போது சமூக வளைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

    ஆசிரியர் தைலம்மையின் இந்த நடவடிக்கை குறித்து, வட்டாரக்கல்வி அலுவலர்கள் சார்பில் மணமேல்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

    புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர். ஆசிரியர் தைலம்மை ஏற்கனவே பள்ளிக்கு  வராமல் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக தலைமை ஆசிரியர் பணியிலிருந்து பதவியிறக்கம் செய்யப்பட்டு ஆசிரியராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

    நீர்நிலைகளை தூய்மை படுத்தும் பணிகளுக்கு 100 நாள் திட்ட பணியாளர்கள் நிதியுதவி வழங்கினர்

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி  அருகே  உள்ள சேந்தன்குடி, நகரம், கீரமங்கலம் வடக்கு ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 400 ஏக்கர் பரப்பளவு உள்ள பெரியார்தாள் ஊரணி தூய்மைப்படுத்தும் பணியை அப்பகுதி மக்கள் கடந்த சில மாதங்களாக  செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் தற்போது பெய்த மழையில் குளங்கள் நீர்நிலைகள், ஏரி வரத்து வாரிகள் நிரம்பி வழிகின்றன. இதனால் அப்பகுதி மக்களும், நீரின்றி அமையாது உலகு அமைப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஊரணி மற்றும் நீர்நிலைகளை  தூய்மைபடுத்தும் பணி தொடர்ந்து நடைபெற,  நகரம்  ஊராட்சியின் 100 நாள் பெண்கள் மற்றும் ஆண்கள் பணியாளர்கள் தங்களால்  இயன்றளவு நிதியை தானாக  முன்வந்து வழங்குவதாக கூறி தலைவர் குணாவல்லரசு தலைமையில், நீரின்றி அமையாது உலகு அமைப்பின் தலைவர் ராஜேந்திரசேதுபதி முன்னிலையில் நிதி வழங்கும் விழா நகரம் அரசு பள்ளி அருகில் நடைபெற்றது.

    இது குறித்து நகரம் ஊராட்சியின் சார்பில் 100 நாள் பெண்கள் கூறுகையில், நகரம் ஊராட்சி பணியாட்கள் நிதி வழங்குவதைப் போல்  மற்ற ஊராட்சிகளிலும் நிதியை தானமாக வழங்கி நீர்வரத்து வரிகளை தூய்மைப்படுத்த வேண்டும் என்றனர்.

    விழாவில் முன்னாள் ஊராட்சி மன்றத்துணைத் தலைவர் துரை.இளசெழியன், வழக்கறிஞர் விஜயராஜ குமாரன், பணித்தாள் பொறுப்பாளர் கோபி கிருஷ்ணன், ஊராட்சி உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும்  பலர் கலந்து கொண்டனர்.

    கால் நடை மருத்துவமனைக்கு குளிர்சாதனம் பெட்டி வழங்கப்பட்டது
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம்ஊராட்சியில் அரசு கால்நடை மருத்துவமனைக்கு ஊராட்சி மன்ற தலைவர் இளங் கோவன் மற்றும் நன்கொடையாளர்கள் மாரிமுத்து, நட ராஜன், பரமசிவம் ஆகியோர் சார்பில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள குளிர்சாதனப் பெட்டியை வழங்கினர். 

    இதன் மூலம்   கால்நடைகளுக்கு  தேவைப்படும் உயர்ரக மருந்து மாத்திரைகள் வைப்பதற்கு இந்த குளிர்சாதன பெட்டி உதவியாக இருக்கும் என்றும், கால்நடைகளுக்கு தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்கும் என்று கால்நடை உரிமையாளர்கள் கூறினர்.
    தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் சேகர் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     
    இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ், மாவட்ட துணைத் தலைவர் கீதா, மாவட்ட தலைவர் சக்திவேல், ராமஜெயம், துரையரசன், ராஜமாணிக்கம்  உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
    காவல்நிலையத்தில் போலீசாரை கத்தியால் குத்திய நபரை வலை வீசி தேடிவருகின்றனர்
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் காரக்கோட்டையை சேர்ந்த அருணாசலம் மகன் முத்துராமலிங்கம்(50) சற்று மனநிலை பாதிக்கப்பட்ட இவர், குடும்ப தகராறு காரணமாக மணல்மேல்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், முத்துராமலிங்கம் போலீஸ் நிலையத்திற்கு வந்துள்ளார்.
    அப்போது அங்கு பணியில் இருந்த  காவலர் ராமமூர்த்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த முத்துராமலிங்கம் தான் வைத்திருந்த கத்தியால் காவலர் ராமூர்த்தியின் வலது கையில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் காயமடைந்த ராமமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

    இச்சம்பவம் இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சாமுவேல்ஞானம் முத்துராமலிங்கம் மீது கொலை முயற்சி உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடிவருகின்றனர்.
    ரெயில் மோதி வியாபாரி பலியான சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை திருவெப்பூர் ரெயில்வே கேட் பகுதியில் நூடுல்ஸ் கடை நடத்தி வந்தவர் ரஞ்சித்குமார்(வயது 28). இவர் நேற்று இரவு அப்பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக சென்னையில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரஞ்சித் குமார் சம்பவ இடத்திலேலேய உடல் சிதறி பலியானார். 

    பலியான ரஞ்சித்குமாருக்கு குடிபழக்கம் உள்ளது. ஆகவே குடிபோதையில் ரெயில் வருவதை கவனிக்காமல் சென்றிருக்கலாம் என கூறப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி ரெயில்வே போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் கோ. கர்ணம் சம்பவ இடம் விரைந்து சென்றார். 

    பின்னர் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இறந்த ரஞ்சித் குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ரெயில்மோதி வியாபாரி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 
    நிலம் விற்றதில் ரூ.32 லட்சம் மோசடி செய்ததாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள நஞ்சூர்  ரகதாம்பாள்புரத்தை «ர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருக்கு கீரனூர் அருகே உள்ள மகாதேவன்பட்டி கிராமத்தில் சொந்தமாக 2.75 ஏக்கர் நிலம் உள்ளது. இதை குளத்தூர் ஓடுகம்பட்டியை சேர்ந்த நில புரோக்கர் சுப்ரமணியன் மூலம் ஈரோடு மாவட்டம் செவந்திபாளையத்தை சேர்ந்த மணி என்பவருக்கு ரூ.37 லட்சத்திற்கு விலை பேசி முன் பணமாக ரூ.4.50 லட்சம் பெற்றுள்ளார்.

    அதன்பின்னர் கடந்த 2019&ம் ஆண்டு பத்திரம் பதிவு செய்துள்ளார். ஆனால் பேசியபடி மீதி தொகையான ரூ.32.50 லட்சத்தை கொடுக்காமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக, மணியிடம் மீதி தொகையை பலமுறை கேட்டும் கொடுக்காததால் புதுக்கோட்டை மாவட்ட குற்றப் பிரிவு போலீசில் பாலசுப்பிரமணியன் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் அடிப்படையில் நில புரோக்கர் சுப்ரமணியன் மற்றும் மணி ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படி கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட புதிய மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
    புதுக்கோட்டை : 

    கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இல்லம்தேடி கல்வி திட்ட புதிய மையங்கள் மஞ்சம்பட்டி மற்றும் கொத்தகபட்டி கிராமங்களில் தொடங்கப்பட்டது. 

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்  கவிதா ராமு உத்தரவுப்படி, முதன்மை கல்வி அதிகாரி சாமி.சத்தியமூர்த்தி வழிகாட்டுதலின் படியும் கந்தர்வகோட்டை ஒன்றியம் மஞ்சம்பட்டி மற்றும் கொத்தகபட்டி கிராமங்களில் புதிய மையங்கள் தொடங்கப்பட்டது, 


    நிகழ்வில் மஞ்சம்பட்டி தலைமையாசிரியர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். கந்தர்வகோட்டை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் தங்கராசு, ரகமத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


    இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டார செயலாளர் சின்னராஜா விழிப்புணர்வு பாடல்கள் பாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.  இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் கலந்து கொண்டு இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    கொரோனா காலத்தில் மாணவர்களிடம் விட்டுப்போன கல்வியை சரிசெய்யும் விதமாக இல்லம் தேடி கல்வி திட்டத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருவதாக கூறினார். 

    இந்த நிகழ்ச்சியில் தன்னார்வலர்கள் நிரோஷா, லோகாம்பாள், கிருத்திகா, பானுப்பிரியா, சீலாராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.


    மஞ்சம்பட்டியில் இல்லம் தேடி கல்வித்திட்ட புதிய மையம் தொடங்கப்பட்ட போது எடுத்த படம்.

    இல்லம் தேடி கல்வி தொடக்க விழாவில் அரசு பள்ளி ஆசிரியர்கள் புரவலர் நிதி வழங்கினர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் கொத்தமங்கலப்பட்டியில் ஊராட்சி  ஒன்றிய  தொடக்கப்பள்ளியில்  இல்லம்  தேடி கல்வி திட்ட மைய தொடக்க விழா பள்ளி தலைமை ஆசிரியர் சரோஜா தலைமையில் நடைபெற்றது.
    விழாவில்  இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியசாமி, ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள்  செந்தில், ஆனந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டு இல்லம் தேடி கல்வி திட்டத்தின் நோக்கம் குறித்து பேசினர்.

    விழாவில் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் பிச்சை, பள்ளி மேலாண்மைக் குழுத்தலைவர் அருட்செல்வம், பட்டதாரி ஆசிரியர்கள் செல்வராசு, ஜெயலட்சுமி, இடைநிலை ஆசிரியர்கள் விஜயகுமாரி, கனகலெட்சுமி, சேகர், கற்பகமணி ஆகியோர் தன்னார்வலர் பெனசீர் பேகத்தை பாராட்டிப் பேசினர்.

    முன்னதாக பள்ளித்தலை மையாசிரியர் சரோஜா முன்னிலையில் அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளி மேலாண்மைக்  குழுத்தலைவர் அருட்செல்வத்திடம் புரவலர் நிதியை வழங்கினர். புரவலர் நிதி வழங்கிய கொத்தமங்கலப்பட்டி ஆசிரியர்களை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

    இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை சரோஜா கூறியதாவது:& 

    பள்ளியின் முன்னாள் மாணவர்கள், கிராம பொதுமக்கள், சமூக ஆர்வலர் என அனைவரும் குறைந்த பட்சம் ஆயிரம்   முதல் விருப்பம் போல் நிதியை பள்ளிக்கு வழங்குவது புரவலர் திட்டம் ஆகும். இத்திட்டத்தில் வரும் தொகைகள் அனைத்தும் வங்கிகளில் வைப்புத்தொகையாக வைக்கப்படும்.
     
    அதிலிருந்து கிடைக்கும் வட்டித்தொகை பள்ளியின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும். எனவே இப்பகுதி மக்களிடம்   புரவலர் திட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே பள்ளி  ஆசிரியர்களாகிய நாங்கள் எங்களை புரவலர்  திட்டத்தில் இணைத்துக்  கொண்டுள்ளோம். எங்களது இந்த செயலால் இனி  இப்பள்ளியில்  புரவலர் திட்ட நிதி பெருகும் என்றார்.
    தொழில் முனைவோராக வேளாண் பட்டதாரிகளுக்கு கலெக்டர் கவிதா ராமு அழைப்பு விடுத்துள்ளார்
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:&

    புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் 2021&22&ம் நிதியாண்டில் செயல்படுத்தப்படும் கலைஞரின் ஒருங்கிணைந்த அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும்  91 கிராம பஞ்சாயத்துக்களில் வேளாண்மை பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் வேளாண் தொழில் முனைவோராகலாம். 

    இத்திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் தேர்வு செய்யப்பட்ட கலைஞரின் ஒருங்கிணைந்த அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும் கிராம பஞ்சாயத்துகளில் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டம் பெற்ற 21 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட, அரசு மற்றும் தனியார் நிறு வனத்தில் பணியில் இல்லாத சிறந்த கணினி புலமையுள்ள வேளாண்மை தொடர்புடைய செயலிகளை பயன்படுத்தும் திறனுள்ள பட்டதாரிகள் 7 நபர்கள் வேளாண் தொழில் முனைவோராக செயல்பட அரசாணைப் பெறப்பட்டுள்ளது.

    இதன்மூலம் அக்ரி கிளினிக் அமைத்தல் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களான காளான் வளர்ப்பு, இயற்கை உரம் தயாரித்தல், பசுமைக்குடில் அமைத்தல், வேளாண் உபரணங்கள் வாடகை மையம் அமைத்தல், விதை உரம், பூச்சி மருத்து விற்பனை நிலையங்கள் மற்றும் நுண்ணீர் பாசனக் கருவிகள் சேவை மையம் ஆகியன அமைப்பதற்கு உட் கட்டமைப்பு நீங்கலாக 2 லட்ச ரூபாய் மற்றும் அதற்கு மேல் உள்ள திட்ட பிரேரணைக்கு அதிகபட்சமாக 1 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப் படவுள்ளது. 

    எனவே, வேளாண்மைத் தொழில் முனைவோராக செயல்பட தகுதியான பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 
     
    மேலும் கூடுதல் தகவல் களை பெற சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் புதுக்கோட்டை, வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார். 
    ×