என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 லட்சத்து 75 ஆயிரம குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 4,75,052 ரேசன் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:&
    தமிழ்நாடு முதலமைச்சர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும்  குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க உத்தரவிட்டார். 

    இதன்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி 1 கிலோ, வெல்லம் 1 கிலோ, முந்திரி 50 கிராம், ஒரு முழு கரும்பு  உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு  பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 4,82,187 அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 968 குடும்பங்களுக்கும் ஆக மொத்தம் 4,83,155 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

    அதன்படி 04.01.2022 முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள 1,028 நியாயவிலைக் கடைகளின் மூலம் புதுக்கோட்டை வட்டத்தில் 64,915 எண்ணிக்கையிலும்,  கந்தர்வக்கோட்டை வட்டத்தில் 25,335 எண்ணிக்கையிலும், குளத்தூர் வட்டத்தில் 41,963 எண்ணிக்கையிலும், திருமயம் வட்டத்தில் 47,489 எண்ணிக்கையிலும், பொன்னமராவதி வட்டத்தில் 31,206 எண்ணிக்கையிலும் வழங்கப்பட்டுள்ளது. 

    ஆலங்குடி வட்டத்தில் 48,102 எண்ணிக்கையிலும், அறந்தாங்கி வட்டத்தில் 59,409 எண்ணிக்கையிலும், கறம்பக்குடி வட்டத்தில் 31,934 எண்ணிக்கையிலும், மணமேல்குடி வட்டத்தில் 28,846 எண்ணிக்கையிலும், ஆவுடையார்கோவில் வட்டத்தில் 27,012 எண்ணிக்கையிலும், விராலிமலை வட்டத்தில் 30,245 எண்ணிக்கையிலும், இலுப்பூர் வட்டத்தில் 38,596 எண்ணிக்கையிலும் என மொத்தம் 4,75,052 அரிசி பெறும் குடும்ப  அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

    மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாம்களான, ஆலங்குடி வட்டம், தோப்புக்கொல்லையில் 431 எண்ணிக்கையிலும், அறந்தாங்கி வட்டம், அழியாநிலையில் 233 எண்ணிக்கையிலும், திருமயம் வட்டம், தேக்காட்டூரில் 293 எண் ணிக்கையிலும் என மொத்தம் 957 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×