search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னமராவதி அருகே புரவி எடுப்பு விழா
    X

    பொன்னமராவதி அருகே புரவி எடுப்பு விழா

    • பொன்னமராவதி அருகே புரவி எடுப்பு விழா நடைபெற்றது
    • மண் குதிரைகளை பொதுமக்கள் அரண்மனைக்கு சுமந்து சென்றனர்

    பொன்மராவதி

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே காட்டுப்பட்டி ஊராட்சியில் ஏன்காட்டு அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயில்ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற ஆடி மாத புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டுகாப்பு கட்டப்பட்டு நாள்தோறும் சாமிக்கு சிறப்பு பூஜையும் அபிஷேகங்களும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. எட்டாம் நாளான மூலங்குடியில் இருந்து காட்டுப்பட்டி அரண்மனை குதிரை உள்ளிட்ட 10 குதிரைகள், ஏராளமான காளைகள், புறவிகள் சிலைகளுக்கு வேஸ்டி துண்டு மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ரெ மேளதாள முழக்கத்துடன் வெள்ளையாண்டிப்பட்டி, காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக கோவில் திடலில் வைத்து வழிபாடு செய்தனர்.இவ்விழாவையொட்டி காட்டுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டோர் மற்றும் தமிழகம் முழுவதிலிருந்தும் பக்தர்கள் வருகை தந்து சிறப்பித்தனர்.

    Next Story
    ×