என் மலர்
உள்ளூர் செய்திகள்

இலவச கண் சிகிச்சை முகாம்.
- கறம்பக்குடியில் இலவச கண் சிகிச்சை முகாம்.
- கண் அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டது
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பன்னீர் தேவர் கல்வி அறக்கட்டளை மற்றும் மதுரை வேலம்மாள் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.. முகாம் பன்னீர் தேவர் திருமண மஹாலில் நடைபெற்றது. முகாமை பன்னீர் தேவர் அறக்கட்டளையின் செயலாளரும் மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளருமான பெரும் தொழில் அதிபர் ப கருப்பையா தொடங்கி வைத்தார். அவர் தொடங்கி வைத்து பேசும்போது இந்த அறக்கட்டளையின் மூலம் வருடம் தோறும் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டு வருவதாகவும் இந்த வருடத்தில் இது இரண்டாவது முறையாக நடத்தப்படும் இலவச கண் சிகிச்சை முகாம் ஆகும் என்றும் மேலும் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து மக்களின் கல்வித் தரம் மற்றும் சுகாதாரத்தை பேணி காக்கும் என்றும் கூறினார். மேலும் பகுதி பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு கண் சம்பந்தமான நோய்கள் அதனை தீர்க்கும் வழிமுறைகளை மருத்துவர்கள் எடுத்துக் கூறினார்கள். மேலும் முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு கண் அறுவை சிகிச்சை கண் லென்ஸ் பொருத்துதல் ஆகியவை இலவசமாக செய்யப்பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். மேலும் வேலம்மாள் மருத்துவமனை தலைமை மருத்துவர்கள் செவிலியர்கள் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு கழகத்தின் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பன்னீர் தேவர் அறக்கட்டளை நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து இருந்தனர்.






