என் மலர்
உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் திருடிய இருவர் கைது
- அன்னவாசல் அருகே துணிகரம் திருட்டு
- இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது
விராலிமலை,
புதுக்கோட்டை மாவட் டம் அன்னவாசல் அருகே உள்ள அண்ணாநகர் புங்கி–னிப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 45). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக் கிளை தாண்றீஸ்வரம் பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்திவிட்டு அருகில் கடைக்கு சென்றிருந்தார்.அவர் மீண்டும் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதேபோன்று பரம்பூரை சேர்ந்த வைத்திலிங்கம் (52) என்பவர் பரம்பூர் வங்கி அருகே நிறுத்தி விட்டு பின்னர் வந்து பார்த்த போது தனது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.இதுகுறித்து அவர்கள் அன்னவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அன்னவாசல் சப் -இன்ஸ் பெக்டர் நாகராஜன் உள் ளிட்ட போலீசார் நடத் திய விசாரணையில் இரண்டு மோட்டார் சைக் கிள்களையும் திருடியது பேராவூரணி செங்கமங்களம் பகுதியை காளிதாஸ் (28), மேலூர் சந்தைப் பேட்டை பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி (19) என்பதும் தெரிய வந்தது/இதனையடுத்து அவர் களை கைது செய்த போலீசார் இரண்டு மோட்டார் சைக் கிள்களையும் பறிமுதல் செய்தனர்.






