என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கறம்பக்குடியில் தமிழர் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    கறம்பக்குடியில் தமிழர் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    • கறம்பக்குடியில் தமிழர் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    • ஆர்ப்பாட்டத்திற்கு புதுக்கோட்டை மத்திய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீரமுத்து தலைமை தாங்கினார்.
    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழர் தேசம் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் கறம்பக்குடி அருகே உள்ள மலையூர் கிராமத்தில் இளம் பெண்ணை கடத்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி சீனி கடை முக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் குற்ற செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாத காவல்துறையை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதுக்கோட்டை மத்திய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீரமுத்து தலைமை தாங்கினார். மேலும் மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×