search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நரிமேடு பகுதியில் வேகதடை, தெருவிளக்குகள் அமைத்து தர வேண்டும்  - நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் கோரிக்கை
    X

    நரிமேடு பகுதியில் வேகதடை, தெருவிளக்குகள் அமைத்து தர வேண்டும் - நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் கோரிக்கை

    • என் குப்பை, என் பொறுப்பு என்ற தலைப்பில் திடகழிவு மேலாண்மை திட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நகராட்சி ஆணையர் சியாமளா தலைமையில் நடை பெற்றது.
    • அதனால் சாலையில் வேக தடை அமைத்து தர வேண்டும் , அதே போல் தெருவிளக்குகள் கூடுதலாக அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டையில் நரிமேடு பகுதியில் உள்ள நகர் புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்கு மாடி குடியிருப்பில் தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் என் குப்பை, என் பொறுப்பு என்ற தலைப்பில் திடகழிவு மேலாண்மை திட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நகராட்சி ஆணையர் சியாமளா தலைமையில் நடை பெற்றது.

    இதில் நகர் நல அலுவலர் பாஸ்கர் , ஆய்வாளர் பாபு, நகர்மன்ற கவுன்சிலர் பழனிவேல், மேஸ்திரி இள ங்கோவன் மற்றும் எஸ்.பி.எம். டீம் கலந்துக் கொ ண்டனர் . அப்போது அப்ப குதி மக்களிடம் குப்பைகளை எவ்வாறு மக்கும் குப்பை வகைகள், மக்காத குப்பை வகைகள், அபாயகரமான குப்பை வகைகள் குறித்து விவரிக்க ப்பட்டது. அப்போது ஆணையரிடம் அப்பகுதி மக்கள் சாலையில் இருச்சக்க ர வாகனங்களை அதிக வேகமாக சிலர் ஓட்டுகி ன்றனர் .

    அதனால் சாலையில் வேக தடை அமைத்து தர வேண்டும் , அதே போல் தெருவிளக்குகள் கூடுதலாக அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அப்போது நகராட்சி ஆணை யர் சியாமளா கூறுகையில்,

    இங்குள்ள 1920 வீடுகளுக்கு கடந்த 3 ஆண்டுகள் கணக்கில் எடுத்துக் கொண்டு வீட்டு வரி ரூ.5 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை மார்ச் மாதத்திற்குள் அனைவரும் செலுத்தி தங்க ள் பெயரில் வீட்டு வரியை மாற்றிகொள்ள வேண்டும் என்றார். மேலும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சி.சி.டி.வி. அமைப்பது போன்ற பணிகளை மேற்கொள்ளலாம்.

    அதற்கு மக்கள் பங்களிப்போடு நகராட்சியும் அதிகளவில் பங்களிப்பை தரும் என்றார். வீட்டு வரி செலுத்தி விட்டால் அரசின் அனைத்து வசதிகளையும் முழுமையாக பெறலாம் என்றார்.

    Next Story
    ×