என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலங்குடி அருகே மணல் கடத்தியவர் கைது
- ஆலங்குடி அருகே மணல் கடத்தியவர் கைது செய்யபட்டார்
- டிப்பர் லாரி பறிமுதல் செய்யபட்டது
ஆலங்குடி:
ஆலங்குடி அருகே திருட்டு மணல் கடத்துவதாக வடகாடு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி ஆவணம் கைகாட்டி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆவணம் கைகாட்டி அரசு பள்ளி அருகில் குளத்து மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியை மடக்கி பிடித்தனர். டிப்பர் லாரியை பரிசோதனை செய்ததில் இரண்டு யூனிட் குளத்து மணல் அரசு அனுமதி பெறாமல் இருந்தது தெரிய வந்தது.பின்னர் மணல் கடத்திய செரியலூர் இனம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஆதித்தன் (வயது 25 ) டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் ஆலங்குடி மாங்காடு வானியர்தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் திருமேனி என்பவர் டிப்பர் லாரியின் உரிமையாளர் என்பது தெரியவந்தது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட டிப்பர் லாரி மற்றும் டிரைவரை வடகாடு காவல் நிலையம் கொண்டு வந்தனர்.பின்னர் வழக்குப்பதிவு செய்த வடகாடு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்ப்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய திருமேனி மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.