என் மலர்
உள்ளூர் செய்திகள்

நம்பன்பட்டியில் சாலை மறியல் போராட்டம்
- நம்பன்பட்டியில் சாலை மறியல் போராட்டம் நடந்தது
- போராட்டத்திற்கு மணி தலைமை வகித்தார்.
ஆலங்குடி,
ஆலங்குடி அருகே உள்ள நம்பன்பட்டியில் மாற்றுத்திறனாளி ராமலிங்கம் வீட்டிற்கு செல்லும் பாதையை அமைத்துத் தரக்கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மணி தலைமை வகித்தார். மறியலில் ஈடுபட்டவா்களிடம் டி.எஸ்.பி. தீபக்ரஜினி, கறம்பக்குடி வட்டாட்சியர் ராமசாமி, ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்மை ஆகியோர் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் சம்பந்தப்பட்ட இடத்தை போராட்ட குழுவோடு பார்வையிட்டு உடனடியாக பாதை அமைத்து தருவது மாற்றுத்திறனாளி ராமலிங்கத்திற்கு வீட்டு மனை பட்டா வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதி கூறியதையடுத்து போராட்டத்தை கைவிடப்பட்டது. போராட்டத்தில் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், துணைச் செயலாளர் சொர்ணகுமார், செயற்குழு உறுப்பினர்கள் அம்பிகாபதி, வேலன், காந்தி, ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






