என் மலர்
உள்ளூர் செய்திகள்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
- தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
- 12-ந் தேதி காலை 10 மணிக்கு நடக்க உள்ளது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்த செய்யும் நோக்கத்தோடு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 12 -ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10மணி முதல் நடைபெற உள்ளது.
இம்முகாமில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளன. இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 28 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், வேலைநாடும் இளைஞர்கள் "தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையதளம் வாயிலாக பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொ ள்ளப்படுகிறது. இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.






