என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் கேட்டு பொது மக்கள் சாலை மறியல்
    X

    குடிநீர் கேட்டு பொது மக்கள் சாலை மறியல்

    • புதுக்கோட்டை கறம்பக்குடி அருகே உள்ள துவார் பெத்தாரிப்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • இந்நிலையில் மின் மோட்டார் பழுதானதால் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை கறம்பக்குடி அருகே உள்ள துவார் பெத்தாரிப்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இவர்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மின் மோட்டார் பழுதானதால் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. தீபாவளி நாளில் குடிநீர் கிடைக்காததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி கிராமமக்கள் துவார் பெத்தாரிப்பட்டியில் கறம்பக்குடி- புதுக்கோட்டை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி தலைவர் மற்றும் மழையூர் போலீசார் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக மின்மோட்டாரை சரி செய்து குடிநீர் வினியோகம் செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×