என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பன்நோக்கு சிறப்பு இலவச மருத்துவமுகாம்-வருகி்ற 24-ன் தேதி நடக்கிறது
    X

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பன்நோக்கு சிறப்பு இலவச மருத்துவமுகாம்-வருகி்ற 24-ன் தேதி நடக்கிறது

    • பன்நோக்கு சிறப்பு இலவச மருத்துவமுகாம் வருகி்ற 24-ன் தேதி நடைபெற உள்ளது
    • இந்த முகாம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான முன்னேற்பாடு கூட்டம் கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது

    புதுக்கோட்டை,

    கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகின்ற 24-ந் தேதி இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான முன்னேற்பாடு கூட்டம் கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது, கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் தமிழகம் முழுவதும் 100 இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் பொதுமக்கள் பயனடையும் வகையில் நடத்திட தமிழ்நாடு முதல்- அமைச்சர் உத்தர விட்டுள்ளார்.

    அதன்படி வருகின்ற 24-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் ஒன்றியம், வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் மற்றும் அறந்தாங்கி ஒன்றியம், மறமடக்கி அரசு மேல்நிலை ப்பள்ளி வளாகத்திலும் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது. எனவே இம்முகாம் குறித்து பொது மக்கள் அதிக அளவில் பயன் ெபறும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். இந்த முகாம்களில் பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்று தங்களுக்கு தேவையான மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, இணை இயக்குநர் ராமு, துணை இயக்குநர் .ராம்கணேஷ் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×