என் மலர்
உள்ளூர் செய்திகள்

இழுப்பூரில் தொழிலாளி அடித்து கொலை
- விராலிமலை இழுப்பூரில் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டு உள்ளார்
- மர்ம நபர்கள் கட்டை, கல்லால் அடித்து வெறிச்செயல்
விராலிமலை,
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள எண்ணை ஊராட்சி க்கு உட்பட்ட திருவண்ணா கோயில்ப ட்டியை சேர்ந்த வர் கணேசன்(வயது 59).இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்த கணேசன், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பின் சொந்த ஊரான திருவண்ணா கோயில்பட்டிக்கு வந்தார்.பின்னர் அவர் சென்னை க்கு செல்லவில்லை. மனை வி மற்றும் மகன்கள் சென்னையில் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் கணேசன் திருவண்ணா கோயில் பட்டியில் கோயில் ஊழியம் உள்ளிட்ட கிடைக்கும் வேலைகளை செய்து சாப்பி ட்டு வந்தார். இன்று (வியா ழக்கிழமை) அதிகாலை தனது வீட்டில் முன் அம ர்ந்திருந்தார்.அப்போது வாகனத்தில் வந்த சில மர்ம நபர்கள் கணேசனை கற்கள் மற்றும் கட்டைகளால் கொடூரமாக தாக்கினர். இதில் அவரது முகம் சிதைந்து சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து தப்பி சென்ற னர்.காலையில் விவசாய வேலைக்குச் சென்ற கூலி தொழிலாளிகள் இலுப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து கொலை செய்யப்பட்டு கிடந்த கணேசன் உடலை மீட்டு பிரேத பரிசோ தனை க்காக அனுப்பி வைத்தனர்.கொலைக்கான காரணம்? கொலையாளிகள் குறித்து உடனடியாக தெரிய வில்லை. சென்னையில் வசிக்கும் அவரது மனைவி மகன்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. கோவில் ஊழியம் செய்து வந்த தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படு த்தி உள்ளது.






