என் மலர்
உள்ளூர் செய்திகள்

அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்
- அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
- புறவழிச்சாலை அமைக்க எதிர்ப்பு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா, மேலாத்தூர் ஊராட்சியில் சிக்கப்பட்டி மற்றும் ஆலங்குடி புறநகர் பகுதிகளில் புறவழிச்சாலை அமைப்பதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அளவிடும் பணிகள் நடைபெற்றது. அப்போது எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து பணிகள் கிடப்பில் போடப்பட்டது.
தற்போது சிக்கப்பட்டி மேலாத்தூர் பகுதிகளில் விவசாய நிலங்களில் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை விவசாயிகள் மற்றும் புரட்சிகர கம்யூனிஸ்ட்டு கட்சியை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் புறவழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அவர்கள், அரசு நிலங்கள் 100 ஏக்கருக்கும மேல் இருப்பதால் அந்த நிலங்களில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.மேலும் விவசாய நிலங்களில் அதிகாரிகள் புறவழிச்சாலை அமைத்தால் விவசாயிகளை சேர்த்து புரட்சிகர கம்யூனிஸ்ட்டு கட்சி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும் எனவும் அறிவித்தனர்.






