search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் பணியாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்ய நடவடிக்கை
    X

    கோவில் பணியாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்ய நடவடிக்கை

    • கோவில் பணியாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
    • காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில் தேர் ஆடிப்பூரத்தன்று கவிழ்ந்தது. 8 பேர் காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

    இவர்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண் வழங்கிய சுற்றுச்சூழல இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    தேர் விபத்து தொடர்பாக இரண்டு தற்காலிக பணியாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விபத்து தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட குழுவின் விசாரணை அறிக்கைக்கு பின் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருவாரூரில் ஒஎன்ஜிசி நிறுவனம் பதித்த குழாயில் 2021-ம் ஆண்டு எற்பட்ட கசிவால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. அதே நிலை தொடர்ந்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால் அந்த பிரிவை நிரந்தரமாக மூடத்தான் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. வேறு எந்த திட்டத்தை தொடங்குவதற்கும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தவில்லை.

    தமிழக விவசாயிகளை பாதிக்கின்ற வகையில் செயல்படுத்தப்படும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்காது.

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றுள்ள அனைத்து நாட்டு விளையாட்டு வீரர்களும் சொந்த நாட்டில் இருப்பது போல உணரும் வகையில் தேவையான அனைத்து வித அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது கலெக்டர் கவிதா ராமு, எம்.எல்.ஏ. முத்துராஜா, தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் உட்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×