என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கந்தர்வகோட்டை அருகே  ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி-சுகாதார பணியாளர்கள் தீவிர நடவடிக்கை
    X

    கந்தர்வகோட்டை அருகே ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி-சுகாதார பணியாளர்கள் தீவிர நடவடிக்கை

    • கந்தர்வகோட்டை அருகே ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டது
    • சுகாதார பணியாளர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் துவார் ஊராட்சிக்கு உட்பட்ட கீழப்பட்டியல் வசித்து வரும் ஒரு நபருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டது.தகவல் அறிந்த வட்டார மருத்துவ அதிகாரி மணிமாறன் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர் தலைமையிலான மருத்துவத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் இணைந்து துவார் ஊராட்சியில் தூய்மைப்பணி, காய்ச்சல் சர்வே, குளோரி நேசன் ஆய்வுகள் செய்யப்பட்டது. மேலும் பொது மக்களிடம் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பலதா செந்தில், வெள்ளாள விடுதலை மருத்துவ அலுவலர் ரஞ்சித், சுகாதார ஆய்வாளர்கள் பழனிச்சாமி, முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×