என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராம நிர்வாக அலுவலர் படுகொலையை கண்டித்து கந்தர்வகோட்டையில் ஆர்ப்பாட்டம்
    X

    கிராம நிர்வாக அலுவலர் படுகொலையை கண்டித்து கந்தர்வகோட்டையில் ஆர்ப்பாட்டம்

    • கிராம நிர்வாக அலுவலர் படுகொலையை கண்டித்து கந்தர்வகோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • படுகொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் பிரான்சிஸ் படுகொலையை கண்டித்தும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூறியும், பணி பாதுகாப்பு கோரியும், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில செயலாளர் அரங்க வீரபாண்டியன் அறிவுறுத்தலின்படி கந்தர்வகோட்டை வட்ட கிளை தலைவர் கருப்பையன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணைச்செயலாளர் பவுல் வின்சென்ட், முரளி, அன்பரசன், வருவாய் அலுவலர் செல்வ சத்யா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக படுகொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    Next Story
    ×