என் மலர்
உள்ளூர் செய்திகள்

தனி நபருக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்ய கோரி போராட்டம்
- தனி நபருக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்ய கோரி போராட்டம் நடைபெற்றது
- கலெக்டரிடமும் கோரிக்கை மனுவை அளித்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கண்மாய் பகுதியில் 15 ஏக்கர் நிலத்துக்கு தனி நபர் பெயரில் பட்டா வழங்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருமயம் வட்ட கும்மங்குடி அருகேயுள்ள கீரணிப்பட்டியில் 50 ஏக்கரில் கீரணி கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் நீர் மூலம் 80 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கண்மாய் பகுதியில் ஆதி திராவிடர்களுக்காக வழங்கப்பட்ட 15 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த பகுதி நீர்ப் பிடிப்பு பகுதியாக உள்ளதால் யாரும் பயன்படுத்தாமல் தரிசாக இருந்து வந்தது.
இந்நிலையில் அண்மையில் அந்த நிலத்தில் தனி நபர் ருவர் பணிகளை தொடங்கியுள்ளார். இது குறித்து கிராமத்தினர் விசாரிதததில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அந்த இடம் அவரது பெயரில் பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது என தெரியவந்தது. இந்த நிலையில் அந்த நிலத்தில் சாகுபடி பணிகள் தொடங்கினால் கண்மாய்க்கு நீர் வரத்து முற்றிலுமாக தடைபடும். எனவே தனி நபருக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வலியுறுத்தி கீரணிப்பட்டி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கலெக்டர் கவிதா ராமுவிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.






