என் மலர்
உள்ளூர் செய்திகள்

தனியார் பஸ் மோதி தம்பதி படுகாயம்
- டிரைவர், கண்டக்டர் ஓட்டம் பிடித்தனர்
- நடுவழியில் பயணிகள் அவதி
பொன்னமராவதி,
புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு தனியார் பஸ் புறப்பட்டது. அந்த பஸ் பொன்னமராவதி சுந்தர சோழபுரம் ஜே.ஜே. நகர் பகுதியில் சென்ற போது அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிபத்து ஏற்பட்டது.இதில் கொன்னையூரை சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன் (வயது 65).அவரது மனைவி ஆனந்தி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். குணசேகரனின் கை, கால் தோள்பட்டையிலும் அவரது மனைவிக்கு காது மற்றும் தலைப்பகுதியிலும் காயம் ஏற்பட்டது.உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து காயப்படைந்த தம்பதியினரை மீட்டு ஆட்டோ மூலமாக சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய அந்த தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோர் கிராம மக்கள தங்களை தாக்கி விடுவார்கள் என பயந்து பேருந்தை விட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர்.அப்போது அந்த பஸ்ஸில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.அவர்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். பின்னர் அரை மணி நேரம் கழித்து அந்த வழியாக வந்த அரசு பஸ்ஸில் ஏறி பொன்னமராவதி புறப்பட்டு சென்றனர். இந்த விபத்து குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






