என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பொன்னமராவதியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
- பொன்னமராவதியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- ராகுல்காந்தியின் எம்பி பதவி நீக்கம் கண்டித்து காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
பொன்னமராவதி:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னம ராவதி பேருந்து நிலையம் எதிரே ராகுல்காந்தியின் எம்பி பதவி நீக்கம் கண்டித்து காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்று பேசுகையில், ராகுல்காந்தி பேசியதில் எந்த வகையான அவதூறும் இல்லை. பேசுவதற்கெல்லாம் அவதூறு வழக்கு தொடர்ந்தால் இந்த நாட்டில் ஒவ்வொரு நாளும் ஒரு கோடி வழக்குகள் தொடர வேண்டும். வாய்மொழி அவதூறுக்கெல்லாம் தண்டனை கிடையாது. இந்திய குற்றவியல் சட்டம் 1860 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு 163 ஆண்டுகளில் இந்தியாவில் எந்த வழக்கிலும் வாய்மொழி அவதூறுக்காக இரண்டு வருடம் தண்டனை விதித்த சரித்திரமே கிடையாது. முதல் முறையாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 15 நாள் தண்டனை அல்லது ரூ 5000 அபராதம் மட்டுமே விதிக்கப்படும். இது விசித்திரமான வழக்கு. கர்நாடக மாநிலம் கோலாரில் பேசியதிற்கு குஜராத் மாநிலம் சூரத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு 3 ஆண்டுகள் கிடப்பில் இருந்தது. ஒருவருடம் தடை. 30 நாள்கள் விசாரித்து தீர்ப்பு. யார் கையெழுத்து போட்டது, உத்தரவு போட்டது என்று தெரியவில்லை.
ராகுல்காந்தியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.விசித்திரமான ஜனநாயக நாடாக இந்தியா மாறி வருகிறது.பேச்சுரிமை என்ற குரல்வளையை நெறித்துவிட்டால் இந்த நாட்டில் ஜனநாயகம் பிழைக்காது. நாம் கொஞ்சம் கண்ணை அசந்து விட்டால் பெற்ற சுதந்திரத்தை மீண்டும் இழக்க கூடிய வாய்ப்பு ஏற்படும் விபரீதம் ஏற்படும்,அப்படி நாம் பெற்ற சுதந்திரத்தை இழந்து விட்டால் மீண்டும் ஒரு மகாத்மா காந்தி வந்து, மீண்டும் சுதந்திரத்தை பெற நூறு ஆண்டுகள் போராட வேண்டி இருக்கும், நாம் அனைவரும் மகாத்மா காந்தியின் வாரிசுகள் என்பதை உணர்ந்து பெற்ற சுதந்திரத்தை காக்க விழிப்புணர்வோடு செயல்பட வேண்டுமென பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்