search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு உற்ற தோழனாக நுகர்பொருள் வாணிபக்கழகம் விளங்குகிறது - அமைச்சர் தகவல்
    X

    விவசாயிகளுக்கு உற்ற தோழனாக நுகர்பொருள் வாணிபக்கழகம் விளங்குகிறது - அமைச்சர் தகவல்

    • cகளுக்கு உற்ற தோழனாக நுகர்பொருள் வாணிபக்கழகம் விளங்குகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
    • பொன்னமராவதி செயல் முறை வட்டக்கிடங்கு திறப்பு விழா

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி அருகே உள்ள வெங்கலமேட்டில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பொன்னமராவதி செயல் முறை வட்டக்கிடங்கு திறப்பு விழா மற்றும் பொது விநியோகத்திட்ட பொருள்கள் வழங்கல் தொடக்க விழா நடைபெற்றது.

    விழாவிற்கு ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜி.கருப்பசாமி தலைமைவகித்தார். அமைச்சர் எஸ்.ரகுபதி பங்கேற்று, நுகர்பொருள் வாணிபக்கழக வட்டக்கிடங்கினை திறந்துவைத்தும், பொதுவிநியோகத்திட்ட பொருள்கள் விநியோகத்தை தொடங்கிவைத்தும் பேசியதாவது,

    இந்த கிடங்கு 2000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்டது. கூடுதலாக மேலும் ஒரு கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் ஒப்புதல் பெறப்படும். விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல் உள்ளிட்ட பொருள்களை நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் அளிப்பதின் மூலம் நல்ல விலை கிடைக்கிறது. மேலும் பொதுமக்களுக்கு நல்ல தரமான பொருள் கிடைக்கிறது. விவசாயிகளுக்கு உற்ற தோழனாக நுகர்பொருள் வாணிபக்கழகம் விளங்குகிறது என்றார்.

    விழாவில் பொன்னமராவதி தி.மு.க. தெற்கு ஒன்றியசெயலர் அடைக்கலமணி, வடக்கு ஒன்றியசெயலர் முத்து, நகரச்செயலர் அழகப்பன், கொன்னைப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் செல்வமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    முன்னதாக நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் உமா மகேஸ்வரி வரவேற்றார். துணை மேலாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்

    Next Story
    ×