என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஆடல் பாடல் நிகழ்ச்சியில் மோதல்: 2 பேர் மீது வழக்கு
  X

  ஆடல் பாடல் நிகழ்ச்சியில் மோதல்: 2 பேர் மீது வழக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆடல் பாடல் நிகழ்ச்சியில் மோதல்: 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
  • நிகழ்ச்சி நீதிமன்ற அனுமதியுடன் நடந்தது

  புதுக்கோட்டை:

  ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் காத்தாயி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழாவை முன்னிட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சி நீதிமன்ற அனுமதியுடன் கடந்த 2-ந் தேதி நள்ளிரவில் நடைபெற்றது. அப்போது ஆலங்குடி அருகே மணவிடுதி ஊராட்சி பெருங்கொண்டான் விடுதி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் முருகன் (வயது 26) இந்நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது புதுக்கோட்டை விடுதி வேலு மகன் அருண்(24), ஆலங்குடி ஆண்டிகுளத்தை சேர்ந்த சரவணன் மகன் பிரகதீஸ் ஆகிய இருவரும் சேர்ந்து முருகனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதனால் அங்கு இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் காயமடைந்த முருகன் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் முருகன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்கு பதிவு செய்து, முருகனை தாக்கிய அருண், பிரகதீஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  Next Story
  ×