என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலங்குடி அருகே சூறாவளி காற்றால் வாழை மரங்கள் ேசதம்-புதுக்கோட்டை எம்.எல்.ஏ. ஆய்வு
- ஆலங்குடி அருகே சூறாவளி காற்றால் சேதமடைந்த வாழை மரங்களை புதுக்கோட்டை எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்
- பாதிப்படைந்த விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் கிடைத்திட அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.
ஆலங்குடி,
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முள்ளங்குறிச்சி, சூரக்காடு, கோட்டைக்காடு, கருப்பகோன்தெரு, வடதெரு, பட்டத்திக்காடு உள்ளிட்ட பகுதிகளில் வீசிய சூறாவளி காற்றில் பல்லாயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதமடைந்தன. இதனை புதுக்கோட்டை எம்.எல்.ஏ. டாக்டர் முத்துராஜா நேரில் சென்று சேதம் அடைந்த வாழை மரங்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். மேலும் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் கிடைத்திட அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். இதில் கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் தவ.பஞ்சாலன், அரசு ஒப்பந்தக்காரர் பரிமளம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






