என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டை அரிமளத்தில் உலக பூமி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
- புதுக்கோட்டை அரிமளத்தில் உலக பூமி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
- இதில் நூற்றுக்கும் மேறபட்டோர் பங்கேற்றனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையை அடுத்த அரிமளத்தில் உலக பூமி தின தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இளையோர் அமைப்பை சார்ந்த இளைஞர்கள், சூழலியல் உரிமைக்கான இளையோர் அமைப்பு, புதுக்கோட்டை ரோஸ் நிறுவனம், டி.டி.எச் ரூரல் லிட்டரசி அண்ட் ஹெல்த் புரோகிராம் இணைந்து நடத்திய இந்த பேரணிக்கு இளையோர் அமைப்பின் தலைவர் சத்யா தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் அகிலா பிளாஸ்டிக் ஒழிப்பு, சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து பேசினார்.
பாடல்கள், ஒயிலாட்டம், பறையாட்டம் ஒலிக்க சுற்றுசூழல் விழிப்புணர்வு கோஷங்களுடன் நடைபெற்ற இந்த பேரணியின் முடிவில், நாடகம் வாயிலாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன் பின்னர் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில், ஜூன் 5ம் தேதி வரை தொடர்ந்து சுற்றுசூழல் பாதுகாப்பு பிரச்சாரத்தை மேற்கொள்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. டி.டி.எச்.-ன் சிந்தியா இளையோர் அமைப்பு சங்கீதா, பத்மினி, கீர்த்தனா, ரோஸ் நிறுவன விஜயா கலைச்செல்வி, வேலாயுதம், மதுரை செந்தில், பாண்டி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் இந்த பிரச்சார பேரணியில் கலந்து கொண்டனர்.






