search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    100 பால் உற்பத்தியாளர் சங்கம் தொடங்க நடவடிக்கை
    X

    100 பால் உற்பத்தியாளர் சங்கம் தொடங்க நடவடிக்கை

    • 100 பால் உற்பத்தியாளர் சங்கம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
    • பால் குளிருட்டு நிலையம் திறந்து வைத்து அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

    கரூர், ஜூலை 30-

    கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் வல்லகுளம், திருமலை ரெட்டிபட்டி, வேப்பங்குடி கிருஷ்ணராயபுரம் வட்டம் மஞ்சா நாயக்கன்பட்டி ஆகிய 4 இடங்களில் ஆவின் நிறுவனத்தின் பால் குளிர்விப்பு மையங்களை, பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார். தோரணங்க்கல்பட்டி ஆவின் குளிரூட்டும் மையத்தில் 50000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய பால் குளிர்விப்பு மையம் அமைக்கப்பட்டு வரும் பணியினையும் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, கரூர் மாவட்டம் உற்பத்தியாளர்களின், பால்களுக்கும் ஒரே மாதிரி விலை என்பதை மாற்றி, தற்போது பாலின் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயத்து இருப்பது என்பது பால் உற்பத்தியாளர்கள்யிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக தலா 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ரூ.106.51 லட்சம் மதிப்பிலான பால் குளிர்விப்பு நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.தற்சமயம் வழக்கத்தை விட நாளொன்றுக்கு கூடுதலாக தமிழ்நாடு முழுவதும் 3.5 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி அதிகப்படுத்தப்பட்டுள்ளது.விவசாய பெருங்குடி மக்களுக்கு 5000க்கும் மேற்பட்ட கால்நடை வாங்குவதற்கான கடன் வசதியை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறோம். 2 இலட்சம் கறவை மாடுகள் புதியதாக வாங்குவதற்கான கடன் வசதிகளை செய்திட வேண்டும். 10 மற்றும் 15 மாடுகளுக்கு மேல் வைத்து வளர்க்கக்கூடிய சிறிய பால் பண்ணைகள் வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இப்பொழுது 203 கிராமங்களில் 146 கூட்டுறது பால் உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளது. இன்னும் நூறு கூட்டுறது பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அதிகப்படுத்தப்பட உள்ளோம். கிராமங்களில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என்று அவர் தெரிவித்தர்.மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா, மாநகராட்சி துணை மேயர் சரவணன், ஆவின் நிறுவன பொது மேலாளர் நாகராஜன், இணை பதிவாளர் இரணியன் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன், பால் உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகள். ஆவின் நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

    Next Story
    ×