search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடி மாத புரவி எடுப்பு திருவிழா
    X

    ஆடி மாத புரவி எடுப்பு திருவிழா

    • செம்பூதி குன்னத்திக்காட்டு அய்யனார் கோவிலில் ஆடி மாத புரவி எடுப்பு திருவிழா
    • 2 கிமீ தொலைவிற்கு மண் குதிரை சுமந்து ஊர்வலமாக எடுத்து வந்த ஊர் மக்கள்

    பொன்னமராவதி,

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள செம்பூதியில் அமைந்துள்ளது குன்னத்திக்காட்டு அய்யனார், நல்ல அய்யனார், வீரமலை அம்மாள் மற்றும் பரிவார தெய்வங்களை உள்ளடக்கியதாக கோயிலாகும். இக்கோயில் ஆண்டுதோறும் ஆடிமாத புரவி எடுப்பு திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இவ்வாண்டும் கடந்த ஆனி மாதம் பிடி மண் கொடுக்கப்பட்டு குதிரைகள் மதிலை சிலைகள்செய்யப்பட்டு ஊர் மந்தையில் வைத்து மலர்களால் அலங்கரித்து வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் ஊரின் எல்லைப் பகுதியில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அய்யனார் கோவிலுக்கு தோளில் சுமந்தவாறு எடுத்துச்சென்று அங்கு வைத்து பூஜை செய்து வழிபாடு செய்தனர். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.இவ்வாறு செய்வதன் மூலமாக மழை பெய்யும், விவசாயம் சிறப்பாக நடைபெறும். தொழில் முன்னேற்றம் பெருகும், ஊர் ஒற்றுமை பெருகும் என்பதனை ஐதீகமாக கொண்டு பல தலைமுறைகளாக தொன்று தொட்டு இந்த வழிபாட்டு முறையை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவ்விழாவை ஒட்டி பாதுகாப்பு பணியில் பொன்னமராவதி போலீசார் ஈடுபட்டிருந்தனர் செய்யப்பட்டு நடைபெற்றது.

    Next Story
    ×