என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் கைது
- கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- திருடு போன நகைகள் மீட்கப்பட்டன
புதுக்கோட்டை:
மழையூர் காவல் நிலைய எல்லைக்குட்ட வெட்டன் விடுதி பகுதியில் கடந்த 12-ந் தேதி வீட்டின் பூட்டை உடைத்து திருடிய தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, மதுக்கூர் கீழ செட்டித் தெருவை சேர்ந்த கோபி (எ) வைரவசுந்தரம்(வயது46). என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மழையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆகியோர்கள் சேர்ந்து கைது செய்து அவரிடம் இருந்து திருடு போன நகை மற்றும் லேப்டாப் ஆகியவற்றை மீட்டனர்.
இதே போல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை மற்றும் கணேஷ் நகர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர்கள் சேர்ந்து ஆயுதப்படை காவல் ஆய்வாளர் வீடு மற்றும் அறந்தாங்கி, அரிமளம், அன்னவாசல் போன்ற பகுதிகளில் பூட்டி இருந்த வீட்டை உடைத்து கொள்ளையடித்த திருச்சி மாவட்டம் துவாக்குடி வாலவந்தான் கோட்டை புத்துகோவில் பெரியார் நகரை சேர்ந்த நாகராஜன்(50), திருச்சி துவாக்குடி மலை பாரதியார் தெருவை சேர்ந்த கௌதம் (23), கரூர் மாவட்டம் குளித்தலை நமச்சிவாயம் நகரை சேர்ந்த ஜுவா என்கிற ஜுவானந்தம்(33) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து திருடு போன பொருட்கள் பறிமுதல் செய்தனர்.






