search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோனியம்மன் கோவிலில் இன்று பூச்சாட்டு திருவிழா
    X

    கோனியம்மன் கோவிலில் இன்று பூச்சாட்டு திருவிழா

    • கம்பம் கோனியம்மன் கோவிலுக்கு இன்று மாலை எடுத்து வரப்படுகிறது.
    • வெள்ளை யானை வாகனத்திலும் அம்மன் வீதி உலா நடக்கிறது.

    கோவை

    கோவையின் காவல் தெய்வமாக கோனியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தேர்த்திருவிழா வெகு விமரி சையாக கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி தேர் முகூர்த்தக்கால் நிகழ்ச்சியுடன் தொடங்கி யது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூச்சாட்டு திருவிழா இன்று இரவு நடக்கிறது. வெரைட்டிஹால் ரோ ட்டில் உள்ள தேவேந்திர வீதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க அம்மனுக்கு பூச்சாட்டு கம்பம் கோனியம்மன் கோவிலுக்கு இன்று மாலை எடுத்து வரப்படுகிறது.

    தூய்மை பணிகள் நிறைவடைந்து பல வண்ண மலர்களால் பூச்சாட்டு கம்பம் அலங்கரிக்கப்படும்.சிவாச்சாரி யர்கள் வேதங்க ளை பாராய ணம் செய்ய கோவில் கொடிக்க ம்பத்திற்கு, முன்பு பூக்கம்பம் எழுந்தருளுவிக்கப்படும்.

    பூச்சாட்டுக் கம்பம் சிவாச்சா ரியர்கள், பக்தர்கள் சூழ மங்கள இசை இசைக்க கோவிலை வலம் வந்து கோவில் முன்பகுதியில் நடப்படும். அதற்கு மஞ்சள் பூசி குங்கும திலகமிடப்படும்.பூச்சாட்டு கம்பத்துக்கு மலர்கள் அணிவித்து சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும். தொடர்ந்து கம்பத்திற்கு கீழ் பகுதியில் உப்பு, மஞ்சள், மிளகு ஆகியவை வைத்து பக்தர்கள் வழிபாடு செய்வர். மேளதாளங்கள், மங்கள இசை இசைக்கப்படும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    20-ந் தேதி( திங்கட்கிழமை) கிராமசா ந்தி பூஜையும், 21-ந் தேதி( செவ்வாய்க்கிழமை) கொடியேற்றம், அக்னிசாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.22-ந் தேதி(புதன்கிழமை) அம்மன் புலி வாகனத்தில் திருவீதி உலாவும், 23-ந் தேதி கிளி வாகனம், 24-ந் தேதி சிம்மன வாகனத்தில் அம்மன் வீதி உலா மற்றும் திருவிளக்கு பூஜை நடக்கிறது.25-ந் தேதி அன்ன வாகனத்திலும், 26-ந் தேதி காமதேனு வாகனத்திலும், 27-ந் தேதி வெள்ளை யானை வாகனத்திலும் அம்மன் வீதி உலா நடக்கி றது.

    28-ந் தேதி(செவ்வா ய்க்கிழமை) திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் மார்ச் 1-ந் தேதி(புதன்கிழமை) நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள்.2-ந் தேதி பரிவேட்டை- குதிரை வாகனம், 3-ந் தேதி தெப்பத்திருவிழா, 4-ந் தேதி தரிசனம், தீர்த்தவாரி, யாளி வாகனம், கொடியிறக்க நிகழ்ச்சியும், 6-ந் தேதி வசந்தவிழாவுடன் தேரோட்ட விழா நிறைவு பெறுகிறது.

    Next Story
    ×