search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில்  அதிகரித்து வரும் தெருநாய்களால் பொதுமக்கள் அவதி
    X

    திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் சுற்றித்திரியும் தெருநாய்களை படத்தில் காணலாம்.

    திண்டுக்கல்லில் அதிகரித்து வரும் தெருநாய்களால் பொதுமக்கள் அவதி

    • தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிந்து சாலைகளில் படுப்பது,வாகன ஓட்டிகளை விரட்டி கடிப்பது, நடந்து செல்வோரை துரத்துவது என அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
    • மக்களை அச்சுறுத்தி வரும் நாய்களை கட்டுப்படுத்த கருத்தடை செய்ய வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிந்து சாலைகளில் படுப்பது,வாகன ஓட்டிகளை விரட்டி கடிப்பது, நடந்து செல்வோரை துரத்துவது என அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

    இந்த அட்டகாசத்தால் நாய் கடிக்கு சிகிச்சை பெற அரசு ஆஸ்பத்திரிக்கு வருப வர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது வெளியே பெரும்பாலானவர்களின் புலம்பலாக உள்ளது.

    ஆங்காங்கே சுற்றித்திரியும் நாய்கள் தெருக்கள் மற்றும் சாலை ஓரங்களில் கிடக்கும் கெட்டுப்போன உணவுகளை சாப்பிட்டு வளர்கின்றன.இது தவிர சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளை தின்று திரிகின்றன.இதில் சில வெறி நாய்களாக மாறும் போது சாலைகளில் செல்வோர்களை எல்லாம் கடிக்க தொடங்கி விடுகிறது.

    இதுஒரு புறம் இருக்க, சாலைகளின் குறுக்கே திடீரென புகுந்து விடுவதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வரும் சம்பவமும் நடக்கிறது. திண்டுக்கல் பேருந்து நிலையம் மற்றும் ரெயில்வே நிலையங்களில் பஸ் மற்றும் ரெயில் ஏறுவதற்காக வேகமாக வரும் பயணிகளை நாய்கள் விரட்டி கடிப்பதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

    திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் என தினமும் 100-க்கும் மேற்பட்டோர் நாய் கடிக்கு ஊசி போட்டு செல்கின்றனர். திண்டுக்கல் பேருந்து நிலையம் ரயில்வே நிலையம் ஒய்.எம்.ஆர். பட்டி, ரவுண்ட் ரோடு, ரெயில்வே காலனி, அனுமந்தநகர், மரியாநாதபுரம், சுப்புராமன் பட்டறை, தென் போஸ்கோ நகர் குள்ளனம்பட்டி, வேடப்பட்டி, நாகல்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.

    பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் தான் நாய்கள் வாகன ஓட்டிகளில் செல்வோரை விடாமல் துரத்துகிறது. இப்படி நாளுக்கு நாள் மக்களை அச்சுறுத்தி வரும் நாய்களை கட்டுப்படுத்த கருத்தடை செய்ய வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×