என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவொற்றியூர் குடியிருப்பு பகுதியில் கியாஸ் சிலிண்டர் குடோன் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
- சுமார் 100-க்கும்மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- மக்கள் கவுன்சிலர் ஜெயராமன் தலைமையில் மாநகராட்சி மண்டல அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர், முல்லை நகர் பகுதியில் குடியிருப்பு அருகில் உள்ள காலி இடத்தில் கோவில் அருகே தனியார் நிறுவனம் சார்பில் கியாஸ் சிலிண்டர் குடோன் வைப்பதற்கு பணிகள் நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 100-க்கும்மேற்பட்டோர் முல்லை நகர் தலைவர் சக்திவேல், செயலாளர் பழனிச்சாமி, துணைத் தலைவர் பொண்ணம்பலம் ஆகியோர் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து குடோன் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கவுன்சிலர் ஜெயராமன் தலைமையில் மாநகராட்சி மண்டல அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
Next Story






