என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டது.
மனநல பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு
- பிரச்சார கலை நிகழ்ச்சி, விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.
- மன்னார்குடி, பெருகவாழ்ந்தான், முத்துப்பேட்டை, நெடும்பலம் ஆகிய பகுதிகளில் பிரச்சார நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி:
உலக மனநல தினத்தை முன்னிட்டு திருத்துறைப்பூ ண்டி நம்பிக்கை தொண்டு நிறுவனம், சென்னை மக்கள் மனநல அமைப்பு சார்பில் மனநல விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி வாகன பிரச்சாரம் நடைபெற்றது.
தொடர்ந்து, பிரச்சார கலை நிகழ்ச்சி, விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. அதில் மனநிலை பாதிக்கப்ப ட்டவர்களை எவ்வாறு கையாள்வது, பாதுகாப்பது குறித்து ஒருவர் மனநலம் பாதிக்கப்ப ட்டவர் போன்று வேடமணிந்து தத்ரூபமாக நடித்து காண்பித்தனர்.
தொடர்ந்து, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
பிரச்சார மானது மன்னா ர்குடி, பெருகவாழ்ந்தான், முத்துப்பேட்டை, நெடும்பலம் ஆகிய பகுதிகளில் நடை பெற்றது.
தொடர்ந்து, திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகே நடந்த நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார், மனோகரன், நம்பிக்கை தொண்டு நிறுவன இயக்குனர் சவுந்தரராஜன், திட்ட மேலாளர் விஜயா மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






