search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு முழு இழப்பீடு வழங்க வேண்டும்; அமைச்சரிடம் வலியுறுத்தல்
    X

    அமைச்சர் சக்கரபாணியிடம், விவசாயிகள் பாதிக்கபபட்ட பயிர்களை காண்பித்தனர்.

    பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு முழு இழப்பீடு வழங்க வேண்டும்; அமைச்சரிடம் வலியுறுத்தல்

    • எதிர்பாராத பருவம் தவறிய தொடர் மழையால் சாகுபடி பயிர்கள் கடும் சேதம்.
    • 22 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வதற்கு உத்தரவிட வேண்டும்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை இன்று அமைச்சர் சக்கரபாணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவரிடம்,

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சாமு.தர்மராஜன் தலைமையில் விவசாயிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    காவிரிபாசன பகுதியில் சம்பா தாளடி நெல் சாகுபடி பணிகள் முழுமையாக முடிந்து நெல் அறுவடை தொடங்கிய நிலையில் எதிர்பாராத பருவம் தவறிய தொடர் பெரு மழையால் சாகுபடி பயிர்கள் கடும் சேதம் அடைந்துள்ளன.

    அறுவடை முடிந்தும் வரப்புகளிலும் நெல் தரிசு நிலத்திலும் ஊடு பயிராக வளர்ந்த உளுந்து, பாசிப்பயிர், நிலக்கடலை மற்றும் புஞ்சை தானிய பயிர்களும் சேதமடைந்துள்ளன.

    இதனால் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் முழு இழப்பீட்டு தொகை கிடைப்பதை உறுதி செய்து தமிழ்நாடு அரசின் நிவாரண நிதியும் சேர்த்து ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 35 ஆயிரம் வழங்கிட வேண்டும்.

    தொடர்ந்து பனிப்பொழிவு மற்றும் பெரும் மழையின் காரணமாக காற்றில் ஈரம் அதிகரித்துள்ள நிலையில் அரசு நேரடி நெல் கொள்ளுதல் நிலையங்களில் 22 சதவீதம் வரையிலான ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வதற்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், நகரச் செயலாளர் ராஜாராமன், ஒன்றிய நிர்வாகிகள் செல்வம், ராஜமாணிக்கம், ராமலிங்கம், திருநாவுக்கரசு, உத்திராபதி, ராம்குமார், ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×