search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சார சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரி ஆா்ப்பாட்டம்
    X

    ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்றோா் நல அமைப்பினா்.

    மின்சார சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரி ஆா்ப்பாட்டம்

    • தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்றது.
    • 2022 ஜன.1-ந் தேதியை கணக்கிட்டு 3 சதவீத அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டும்.

    நாமக்கல்:

    தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்றது.

    இந்த ஆா்ப்பாட்டத்திற்கு சின்னுசாமி தலைமை வகித்தாா். மண்டலச் செயலாளா் காளியப்பன் தொடக்க உரையாற்றினாா். சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளா் என்.வேலுசாமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

    இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்; மின்சார சட்ட மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

    2022 ஜன.1-ந் தேதியை கணக்கிட்டு 3 சதவீத அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டும்; மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் நிபந்தனைகளை அகற்றி, அனைத்து நோய்களுக்குமான சிகிச்சைக்கும் காப்பீட்டு நிறுவனங்களே செலவுத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    இதில், ஓய்வு பெற்ற மின்வாரியப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×