என் மலர்
உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் போராட்டம்
- திண்டுக்கல் மாவட்ட மையம் சார்பில் இன்று ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.
- வட்டார வளர்ச்சி அலுவலரை பணியிடமாற்றம் செய்யும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றனர்.
திண்டுக்கல்:
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் திண்டுக்கல் மாவட்ட மையம் சார்பில் இன்று ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. மாநிலத்தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் தலைமை வகித்தார்.
இதுகுறித்து போராட்ட த்தில் ஈடுபட்ட வர்கள் தெரிவி க்கையில், ெகாடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரிந்து வரும் வட்டார வளர்ச்சி அலுவலர் பணியாளர்களையும், ஊராட்சி செயலர்களையும் ஒருமையில் பேசுவதுடன், தரக்குறைவாக நடத்தி வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு வடகவுஞ்சி ஊராட்சி செயலரிடம் மிரட்டி ஆவணங்களை எடுத்து சென்றதாக புகார் எழுந்தது.
அலுவலகத்திற்கு தொடர்பில்லாத நபர்களை உதவியாளராக வைத்துகொண்டு கோப்புகளை கையாள விடுகிறார். எனவே இவரை பணியிடமாற்றம் செய்யும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றனர்.
இந்த போராட்டத்தால் உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.






