search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற முதியவர்களுக்கு பரிசு- கலெக்டர் வழங்கினார்
    X

    வெற்றி பெற்ற முதியவர்களுக்கு கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் பரிசு வழங்கி பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.

    பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற முதியவர்களுக்கு பரிசு- கலெக்டர் வழங்கினார்

    • ஜனநாயக முறைப்படி வாக்களித்தற்காக முதியோர்களுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கினார்.
    • தஞ்சாவூர் மாவட்டத்தில் 20 முதியோர் இல்லங்கள் செயல்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சர்வதேச முதியோர் தினத்தினை முன்னிட்டு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

    தொடர்ந்து சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற முதியோர்களுக்கு கலெக்டர் பரிசுகளை வழங்கினார்.

    மேலும் 80 வயதுக்கு ேமற்பட்ட முதியோர்கள் ஜனநாயக முறைப்படி வாக்களித்தற்காக தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழை வழங்கினார்.

    இதையடுத்து "இந்திய குடிமகன் குடிமகளாகிய நான், முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன் எனவும், மனோரீதியாகவும் உடல் ரீதியாகவும் காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன் எனவும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன்.

    பொது இடங்களான மருத்துவமனை, வங்கி, பேருந்து போன்ற இடங்களில் முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களுக்கெதிரான கொடுஞ்செயல்கள், வன்மு றைகள் எவ்விதத்திலும் இழைக்கப்படுவதனை தடுத்திட பாடுபடுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன்."

    என்ற உறுதிமொழி வாசிக்க அனைத்து அரசு அலுவலர்களும் அதனை பின் தொடர்ந்து வாசித்தனர்.

    பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரி வித்ததாவது:-

    தமிழ்நாட்டில் அதிக ரித்து வரும் ஆதரவற்ற முதியோர்களின் எண்ணிக்கையினை கருத்தில் கொண்டு அவர்களின் நலன் காக்க சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் ஆதரவற்ற முதியோர்களுக்கான இல்லங்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் 20 முதியோர் இல்லங்கள் செயல்பட்டு வருகிறது. இதுவரை 19 முதியோர் இல்லங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1 முதியோர் இல்லம் பதிவு செய்யப்பட நடவடிக்கையில் உள்ளது.

    அனைத்து முதியோர் இல்லங்களில் உள்ள முதியவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டம் 2007ன் கீழ் 187 மனுக்கள் பெறப்பட்டு, 182 மனுக்கள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி சுதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரெங்கராஜன், மாவட்ட சமூக நல அலுவலர் ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×